ஆறுதல்

மரண அறிவித்தல்

சூரியதாசன் பொன்னுத்துரை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சூரியதாசன் பொன்னுத்துரை

வயது 6327 ஜூலை, 1955 – 24 ஏப்ரல், 2019

பிறந்த இடம்
வண்ணார்பண்ணை
வாழ்ந்த இடம்
Oberhausen

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வண்ணார்பண்ணை நாச்சிமார் கோவிலடி கே.கே.எஸ் வீதியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Oberhausen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சூரியதாசன் பொன்னுத்துரை அவர்கள் 24-04-2019 புதன்கிழமை அன்று ஜேர்மனியில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், பொன்னுத்துரை(SEP) பவளம் தம்பதிகளின் ஏக புதல்வரும், காலஞ்சென்றவர்களான குணரத்தினம் பர்வதலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மாலதி அவர்களின் அன்புக் கணவரும்,

சுவீற்ரா, சூர்யா, மேனுயா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நீல்ஸ் சென்டற்ஸ்கி அவர்களின் பாசமிகு மாமனாரும்,

மனோரதி(யாழ்ப்பாணம்), ஜெயரதி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நந்தகுமாரன்(யாழ்ப்பாணம்), தட்சணாமூர்த்தி(சுவிஸ்), மஞ்சுளா(யாழ்ப்பாணம்), மனோகரன்(பிரான்ஸ்), மனோகரி(வசந்தி- கொலன்ட்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிரியா மயூறா அவர்களின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

இலங்கையின் அழகு நிறைந்த இடமும், யாழ்ப்பாணம் நகருக்கு அன்மையிலும் படித்த மக்களை அதிகம் கொண்டதும், அழகிய கோவில் அமைந்த இடம் , வாழைத்தோட்டம், மரக்கறித் தோட்டம், பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த யாழ்.வண்ணார்பண்ணை நாச்சிமார் கோவிலடியில் 27-07-1955 இல் திரு திருமதி பொன்னுத்துரை(SEP) பவளம் தம்பதிகளுக்கு அன்புப் புதல்வனாய் சூரியதாசன் அவர்கள் மனோரதி, ஜெயரதி ஆகிய உடன் பிறப்புகளுடன் இவ் அழகு நிறைந்த ஊரில் அவதரித்தார். மேலும் அன்பும் அழகும் நிறைந்த இவர் வளர்ந்து மிடுக்கான தோற்றத்துடன் அழகிய வாலிபனானதும் திரு.திருமதி குணரத்தினம் பர்வதலட்சுமி தம்பதிகளின் அழகுப் பெண்ணான மாலதி அவர்களை திருமணம் முடித்து இனிமையாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து வந்ததன் பயனாக சுவீற்ரா, சூர்யா, மேனுயா போன்ற அழகுப் பிள்ளைகளைப் பெற்று அன்பாகவும் பண்பாகவும் வளர்த்தார்.

இவர் வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் நிறைந்தவராகவும் பொறுமைசாலியாகவும் விளங்கியதுடன், குடும்பத்தின் வளர்ச்சிக்காக ஜேர்மனியில் பாடுபட்டு உழைத்ததுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டும் விளங்கினார். இவ்வாறு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 24.04.2019 இல் 63 வயதில் ஜேர்மனியில் உள்ள Oberhausen நகரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

முழுக் கதையையும் வாசிக்க

நாச்சிமார் கோவிலடி
......நல் முத்தே
பூ முகமே
......புன் சிரிப்பே
வசீகரப் பேச்சே
.....வள்ளல் குணமே
வாடி வதங்குகிறோம்
.....வாழ்விழந்து தவிக்கிறோம்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.