மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சூசன் மேரிராணி கிறிஸ்தோப்பர்
வயது 7721 அக்டோபர், 1938 – 3 மார்ச், 2016
- பிறந்த இடம்
- சிங்கப்பூர்
- வாழ்ந்த இடம்
- யாழ்ப்பாணம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகசிங்கப்பூர் மலேயாவைப் பிறப்பிடமாகவும், யாழ். அடப்பன் வீதியை வதிவிடமாகவும் கொண்ட சூசன் மேரிராணி கிறிஸ்தோப்பர் அவர்கள் 03-03-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான எட்வேட் பாலசிங்கம் கிறேஸ் செல்வம் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான அகஸ்ரின் கிறிஸ்தோப்பர் எலிசபெத் பூரணம் தம்பதிகளின் சிரேஷ்ட மருமகளும்,
J.T.M. கிறிஸ்தோப்பர்(இளைப்பாறிய எழுதுவினைஞர்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,
சுகந்தறோகான், சுகந்தநேசன், சுகந்தநாதன், அனற் செல்வினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான தவசிங்கம் எட்வேட், கனிஸ்ரா ஆனந்தராணி, மற்றும் யூலியன் எட்வேட் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
துளசி, சிவராணி, யோகேஸ்வரி, மகிழ்ராஜன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற கிறேஸ் அற்புதமலர், அருட்சகோதரி பெனிக்னா, இமானுவேல் கிறிஸ்தோப்பர், லூட்ஸ் தவமலர், அருட்தந்தை ஞானராஜா கிறிஸ்தோப்பர், சுகன்யா, விங்கா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சயந்தன், நிஷேவிதா, அஜந்தன், கௌசிகா, அனோஜன் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
கரோலின், கிறிஸ்ரி ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 07-03-2016 திங்கட்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் புனித மரியன்னை பேராலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் புனித கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

