நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுசிலாதேவி அருளானந்தம்
முன்னாள் சிரேஸ்ட விரிவுரையாளர், முன்னாள் தலைவர் பல்கலைக்கழக கல்வியற்துறை
வயது 6819 ஜனவரி, 1951 – 29 செப்டம்பர், 2019
- பிறந்த இடம்
- நுணாவில் மேற்கு
- வாழ்ந்த இடம்
- நுணாவில் மேற்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஎங்கள் தாயாரின் மரணச்செய்தி கேட்டு, இல்லம் நாடி ஓடோடி வந்து எமக்கு ஒத்தாசைகள் புரிந்தவர்களுக்கும், நேரில் வந்து ஆறுதல் கூறிய அன்புள்ளங்கள் அனைவருக்கும், தொலைபேசி, அனுதாப அட்டைகள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக அனுதாபம் தெரிவித்த உள்நாட்டு, வெளிநாட்டு உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும், கண்ணீர் அஞ்சலி பிரசுரித்த அன்பர்களுக்கும், மலர்வளையம் வைத்து அஞ்சலி செய்தோருக்கும் மற்றும் இறுதி நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
நான்கு பக்கமும் கடலால் சூழ்ந்த அழகிய இலங்கைத் தீவில் தமிழ் பேசும் மக்களும், கல்வி அறிவு கூடிய சமுதாயங்களைக் கொண்ட வடபுலத்தில், A9 வீதி ஊடறுத்துச் செல்லும் அழகிய தென்மராட்சியில் சகல வளங்களைக் கொண்ட சாவகச்சேரி நுணாவில் மேற்கில் 19/JAN/1951 ஆம் ஆண்டில் திரு திருமதி அருளானந்தம் தம்பதிகளுக்கு அறிவு மகளாக சுசிலாதேவி அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் இராதா அருளானந்தம், மனோரதி அருளானந்தம் ,படைவீரசிங்கம் தவமணிதேவி, கமலா, அற்புத அருந்தவராசா, கலாநாதன், கனேந்திரன் போன்ற உடன்பிறப்புகளுடன் கூடி ஒன்றுபட்டு வளர்ந்து பெரியவளாகி சந்தோஷமாக வாழ்ந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் நன்கு படித்து பல்கலைக்கழக கல்வியற்துறைத் தலைவராகவும், சிரேஸ்ட விரிவுரையாளராகவும் கடமையாற்றி ஓய்வு பெற்றதுடன் அன்பான பேச்சால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவரும் கடின உழைப்பாளியும். கலகலப்பாக பேசுவதும், தனக்கே உரித்தான புன்சிரிப்பும் கொண்டதுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார்,
இவ்வாறு உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 29.09.2019 இல் 68 வயதில் நுணாவிலில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.
“கல்வியில் சிறந்த கருனை உள்ளமே
பல்கலை கற்று பலருக்கு உதவிய
குரு தாயே குழந்தை மனமே
சேவைக்காய் வாழ்ந்து வாழ்வினில் உயர்ந்து
பல மனங்களை வென்று
வீழ்ந்தாலும் மறையாது நிலைத்தீரே”
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

