1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுதாகரன் தனபாலசிங்கம்
வயது 5421 ஏப்ரல், 1965 – 31 ஜூலை, 2019
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- யாழ்ப்பாணம், இந்தியா, London, Toronto, Edmonton
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், இந்தியா, லண்டன், கனடா Toronto, Edmonton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த சுதாகரன் தனபாலசிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
கண்ணில் அழுகை ஓயவில்லை எம்
கனவு வாழ்க்கை புரியவில்லை
விழிகள் உங்களை தேடுகையில் விழிநீர்
ஆறாய் ஓடுகிறதே!
பறி கொடுத்து விட்டாலும்
உங்கள் பாசத்தைப் பறித்துவிட
எத்தனை ஜென்மம் வேண்டும் அவனுக்கு!
நீங்கள் எனக்கு வழங்கிய பாச உறவு
என்றும் பிரியாது அப்பா!!!
துணை எமக்கு யாரென்று
துவண்டிடும் வேளையில்
நீங்கள் என்றென்றும் எங்களை
நல்வழியில் நடத்துவீர்கள் என்கின்ற
துணிவிலேயே வாழ்கின்றோம்.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
இயற்கை அழகு நிறைந்த இலங்கைத் தீவில் தமிழர்கள் தொண்மையாக வாழும் பகுதியும்,சைவப் பாரம்பரியம் தழைத்தோங்கும் யாழ்ப்பாணத்தில் 21/APR/1965 இல் திரு.திருமதி Dr.தனபாலசிங்கம் செல்லப்பா இந்திராதேவி தம்பதிகளின் அன்பு மகனாக திரு.சுதாகரன் அவர்கள் இவ் அழகு நிறைந்த நாட்டில் மழலையாக அவதரித்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் விஜிதா, பிரபாகரன், பிரதீகரன் போன்ற உடன்பிறப்புகளுடன் குறும்புகள் செய்து மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவனானதும் திரு.திருமதி கந்தசாமி முத்துக்குமார் நித்தியலஷ்மி தம்பதிகளின் அன்பு மகள் ஜெயபாரதி எனும் அழகிய தேவதையுடன் திருமண பந்தத்தில் இணைந்து மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து வாகுலின் எனும் அழகிய பிள்ளையைப் பெற்று மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் இந்தியா, London, கனடா Toronto, Edmonton நகரம் என பல இடங்களில் வாழ்ந்த இவர் அன்பான பேச்சால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவரும் கடின உழைப்பாளியும். கலகலப்பாக பேசுவதும்,தனக்கே உரித்தானபுன்சிரிப்பும் கொண்டதுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார், இவ்வாறு மனைவி, பிள்ளை, உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 31.07.2019 இல் 54 வயதில் கனடாவில் உள்ள Edmonton நகரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.
அழகு வதனமே அன்பு உருவமே
நிழல் போல் வாழ்ந்த நிஜ உறவே
புன்னகைப் பூவினை பொழியும் உயிரே
நின் மன அன்பு நெடுகாலம்
நிலைக்காது மறைந்து போனதே
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

