ஆறுதல்

நன்றி நவிலல்

விபுலேந்திரன் சுவெஸ்திகன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

விபுலேந்திரன் சுவெஸ்திகன்

வயது 1828 டிசம்பர், 2000 – 13 செப்டம்பர், 2019

பிறந்த இடம்
Saint-Denis
வாழ்ந்த இடம்
Drancy

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

அன்னாரின் மறைவுச்செய்திக் கேட்டு நேரில் வந்தும், வெளிநாடுகளிலிருந்து தொலைபேசி வழியாகவும், இணையத்தளங்கள் வழியாகவும் ஆறுதல் தெரிவித்தோர், கண்ணீர் அஞ்சலிகள் பிரசுரித்தோர், மலர்வளையம் அனுப்பியவர்கள், இறுதி நிகழ்வுகளில் பங்குகொண்டோர், மற்றும் பல வழிகளிலும் உதவி புரிந்த அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

— குடும்பத்தினர்

வாழ்க்கை வரலாறு

சிறு வயதிலேயே வாழ்வில் நேர்மையும், சாதிக்க வேண்டும் என்கின்ற சிந்தனையும் மனதில் கொண்ட விபுலேந்திரன் சுவெஸ்திகன் வாழ்க்கை வரலாறிது...

உலகிலேயே அதிகளவு சுற்றுலாப் பயணிகள் செல்லும் பிரான்ஸ் நாட்டில் Saint-Denis நகரில் விபுலேந்திரன் சுபாஜினி தம்பதகளின் பாசமிகு புதல்வனாக 28/DEC/2000ஆம் ஆண்டு பிறந்த சுவெஸ்திகன் அவர்கள் வினோஜன், சௌபர்ணிகா ஆகிய தமது உடன்பிறந்த சகோதரங்களுடன் Saint-Denis, Drancy நகர வீதிகளில் ஓடி ஆடி விளையாடி வளர்ந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

பள்ளியில் சிறந்த மாணவராக விளங்கிய சுவெஸ்திகன், படிப்பிலும் சிறந்து விளங்கினார். தனது பள்ளிப்படிப்பை முடித்தபின் மேற்படிப்பிற்காக பல்கலைக்கழகத்தில் சேர்ந்த இவர் கராத்தே பயிற்சியில் ஆர்வம் கொண்டு அதைக் கற்று வந்தார்.

உலகத்தின் மூத்த மொழியாம் தமிழ் மொழியை தாய் மொழியாக கொண்ட சுவெஸ்திகன் அவர்கள், தமிழ் மொழி எழுதபடிக்க முறைப்படி கற்று மற்றும் அதன் பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றை பின்தொடர்வதில் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கினார்.
நண்பர்களுடன் இணைந்து மேடைகளில் நடனமாடுவதில் அலாதி விருப்பம் கொண்ட சுவெஸ்திகன், வாழ்வில் சாதிக்க வேண்டும் என்பதை தன்மனதில் ஆழமாக நிலைநிறுத்தி அதற்காக வாழ்க்கையில் சாதித்த மனிதர்களின் புத்தகங்களை படிப்பதில் நாட்டம் கொண்டிருந்தார்.

குடும்ப பொறுப்பை தனது சிறுவயதிலேயே ஏற்று நடத்திய சுவெஸ்திகன், அம்மா அப்பா சொல்லை தாரகமந்திரமாக ஏற்று நடப்பவர். வாகனத்தில் அளாதி விருப்பம் கொண்டவராகவும் விளங்கினார்.

தனது உறவுகளிடம் அன்பையும் பாசத்தையும் காட்டி, மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக வாழ்ந்து, சிறந்த நேர்மறை எண்ணங்களைக் கொண்டு மற்றவர்களோடு ஒப்பிடுகையில் தனது நற்பண்புகளால் வேறுபட்ட மனிதனாக இருந்த சுவெஸ்திகன், இலங்கையில் உள்ள வசதியற்ற தமிழ் மக்களின் குழந்தைகளை தான் படிக்க வைக்க வேண்டும் என்பதை தனது உறவுகள், நண்பர்களிடம் அடிக்கடி கூறிவந்தார். அதன் மூலமே அவர்களின் வாழ்வு மேம்படும் என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டிருந்தார்.

தனது பெற்றோர், சகோதரங்கள், நண்பர்கள், உறவுகள் என அனைவரிடத்திலுமே அன்பை மட்டுமே கொடுக்கத் தெரிந்த இவனுக்கு, தனது பிரிவையும் சேர்த்து கொடுக்கும் காலம் சீக்கிரமே வரும் என்பதை யாரும் அறிந்திருக்கமாட்டார்கள். ஏன் தான் அந்த கொடுமையான நாள் வந்ததோ தெரியவில்லை, தனது நண்பர்களுடன் சேர்ந்து காரில் பயணப்பட்ட இவன், விதியின் சதியால் இந்த உலகத்தை விட்டு 14.09.2019இல் விண்ணுலகம் பயணித்தான்

பிற அறிவித்தல்கள்

  1. மரண அறிவித்தல் · 17 செப்டம்பர், 2019அகாலமரணம்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.