மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுவாமிநாதன் பாலேந்திரா
முன்னாள் வட மாகாண பணிப்பாளர், வீதி அபிவிருத்தி அதிகாரசபை, இலங்கை
வயது 8029 ஜூன், 1938 – 24 ஏப்ரல், 2019
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- சிட்னி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஆதிமயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா சிட்னியை வசிப்பிடமாகவும் கொண்ட சுவாமிநாதன் பாலேந்திரா அவர்கள் 24-04-2019 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுவாமிநாதன், பூதாத்தைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், சுன்னாகத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற மண்டலநாயகம் இரத்தினதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பத்மலோஜினி அவர்களின் அருமைக் கணவரும்,
பூம்பொழில், உமாபங்கன், கலாநிதி உமைமைந்தன் ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,
அஜந்தன், வைத்திய கலாநிதி சௌமியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆகாஷ், அனிதா, ஹரன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி சிவராசா, இராஜராஜேஸ்வரி முதலியார், ஆனந்த குமாரசுவாமி மற்றும் புவனேஸ்வரி சண்முகலிங்கம்(சிட்னி, அவுஸ்திரேலியா), காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி சச்சிதானந்தன், ஸ்ரீ பாஸ்கரன், பேராசிரியர் சுசீந்திரராஜா, வைத்திய நிபுணர் மகேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வைத்திய கலாநிதி செல்லப்பா, திருஞானசம்பந்தன், விக்கினேஸ்வரன், கோணேஸ்வரன், கமலலோஜினி வரதராஜா, அம்பிகா குகதாசன், நளினலோஜினி சத்தியகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணத்தில் அழகிய இடமும், நெல்வயல்கள், பயன்தரு மரங்கள், மரக்கறித் தோட்டங்கள், மிளகாய் வெங்காய வயல்கள், வாழைத் தோட்டங்கள் என அழகு நிறைந்த ஆதிமயிலிட்டியில் 29-06-1938 இல் சுவாமிநாதன் பூதாத்தைப்பிள்ளை தம்பதிகளுக்கு அன்புப் புதல்வனாய் பாலேந்திரா அவர்கள் மகேஸ்வரி சிவராசா, இராஜராஜேஸ்வரி முதலியார், ஆனந்தகுமாரசாமி, புவனேஸ்வரி சண்முகலிங்கம், பரமேஸ்வரி சச்சிதானந்தன், ஸ்ரீபாஸ்கரன், பேராசிரியர் சுசீந்திரராஜா, வைத்திய நிபுணர் மகேந்திரன் ஆகிய உடன் பிறப்புகளுடன் இவ் அழகு நிறைந்த ஊரில் அவதரித்தார்.
மேலும் அன்பும் அழகும் நிறைந்த இவர் வளர்ந்து மிடுக்கான தோற்றத்துடன் அழகிய வாலிபனானதும் திருமணம் முடித்து வைக்க எண்ணிய பெற்றோர் சுன்னாகத்தைச் சேர்ந்த மண்டலநாயகம் இரத்தினதேவி தம்பதிகளின் அழகுப் பெண்ணான பத்மலோஜினி அவர்களை திருமணம் முடித்து வைத்தனர், இவர்கள் இனிமையாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து பூம்பொழில், உமாபங்கன், கலாநிதி உமை மைந்தன் எனும் அன்பு நிறைந்த பிள்ளைகளைப் பெற்றெடுத்து பாசமாகவும் பண்பாகவும் பாதுகாத்து வளர்த்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
இவர் கடின உழைப்பாளியாக திகழ்ந்தார், அதாவது இலங்கையின் வட மாகாணத்தில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளராக சேவை செய்து ஓய்வு பெற்றவராவார், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் நிறைந்தவராகவும் பொறுமைசாலியாகவும் அறிவு நிறைந்தவராகவும் விளங்கினார், குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கினார். இவ்வாறு மனைவி, பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 24.04.2019 இல் 80 வயதில் அவுஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.
"அறிவில் சிறந்த
.....அன்பு உள்ளம்
மயிலிட்டி மைந்தன்
.....மகத்தான மனிதன்
சேவையே கடமையாய்
....செயற்பட்ட வீரன்
சென்றதேன் எமை விட்டு
... செம்மலே சொல்வாய்"
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

