நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
த. துரைச்சாமி ஸ்ரீகாந்தன்
வயது 597 ஜூலை, 1959 – 5 மே, 2019
- பிறந்த இடம்
- திருநெல்வேலி
- வாழ்ந்த இடம்
- Gretz-Armainvilliers
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுக"ஆருயிர் தெய்வம் எம் அன்பு உறவு
இறையடி எய்த இறுதி நிகழ்வில்
ஓடோடி வந்த உற்றார் உறவினர்
நல்ல நண்பன் நட்பின் சிகரங்கள்
துயரில் பங்குற்று துன்பம் போக்கிய
அனைத்து உள்ளங்களுக்கும் அன்பு நன்றிகள்"
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
இலங்கையின் அழகு நிறைந்த இடமும்,படித்த மக்களை அதிகம் கொண்டதும்,பல்கலைக் கழகம் அமைந்துள்ள இடமும்,வாழைத்தோட்டம், வெங்காய வயல்கள் மரக்கறித் தோட்டம்,பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த யாழ்.நிருநெல்வேலியில் 07/JUL/1959 இல் தம்பு துரைசாமி ராகராணி தம்பதிகளுக்கு மூத்த புதல்வனாக ஸ்ரீகாந்தன் அவர்கள் ஸ்ரீரஞ்சன், ஸ்ரீரஞ்சினி, ஸ்ரீகுமார், நாகநந்தினி, யோகலதா, சந்தாணகிருஸ்ணன், கலைச்செல்வி, தர்ஷினி ஆகிய உடன்பிறப்புகளுடன் இவ் அழகு நிறைந்த ஊரில் அவதரித்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் மெல்ல மெல்ல வளர்ந்து மிடுக்கான தோற்றத்துடன் பண்பு நிறைந்த நல்லுள்ளம் கொண்டவராக விளங்கியதுடன் தியாகலிங்கம் சிவநேசம் தம்பதிகளின் அன்பு மகள் கலைச்செல்வி அவர்களுடன் திருமண பந்தத்தில் இணைந்து இன்பமாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் பெற்றோல் என அன்பாக நண்பர்களால் அழைக்கப்படும் இவர்,நண்பர்களுக்காக எதையும் செய்யக் கூடிய மனம் கொண்டவராகவும், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் நிறைந்தவராகவும் பொறுமைசாலியாகவும் விளங்கியதுடன், இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டும் விளங்கினார், இவ்வாறு மனைவி,நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 05.05.2019 இல் 59 வயதில் பிரான்ஸில் உள்ள Gretz Armainvilliers நகரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
"அன்பு உள்ளம்
......அன்னை மனசு
நட்பாக வாழ்தல்
.......நல்லதையே செய்தல்
நண்பருக்கு உதவுதல்
.....நன்றி மறக்காமை என
வாழ்ந்து உயர்ந்த உள்ளம்
....... வாழ்வை முடித்ததேன் "
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

