மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தெட்சணாமூர்த்தி ஆறுமுகம்
முன்னாள் வவுனியா வர்த்தகர்- புகையிலைக்கடை, குளப்பிட்டிச் சந்தி பாய்க்கடை உரிமையாளர்
வயது 709 டிசம்பர், 1948 – 10 ஜூலை, 2019
- பிறந்த இடம்
- சரவணை
- வாழ்ந்த இடம்
- கொக்குவில்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சரவணையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், கொக்குவிலை வசிப்பிடமாகவும் கொண்ட தெட்சணாமூர்த்தி ஆறுமுகம் அவர்கள் 10-07-2019 புதன்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பையா சொர்ணம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மனோன்மணி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
மஞ்சுளா(பிரான்ஸ்), கரன்(பிரான்ஸ்), மயூரி(பிரான்ஸ்), மாருதி(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
முகுந்தன்(பிரான்ஸ்), ரசிதா(பிரான்ஸ்), புஷ்பகரன்(பிரான்ஸ்), சசிக்குமார்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான கிருபாதேவி, நல்லையா மற்றும் கனகரட்ணம், குணரட்ணம், காலஞ்சென்ற சகுந்தலாதேவி, மற்றும் அசோகமாலாதேவி, மகேந்திரராஜா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற செல்வரத்தினம், இரத்தினமலர், இராசமலர், தவமலர், காலஞ்சென்றவர்களான ஜெயராமச்சந்திரன், சுகந்தி, பராசக்தி, கதிரமலை மற்றும் துரை, செல்லா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற நடராசா, சாருமதி, கவிதா, வசந்தநாதன் ஆகியோரின் பாசமிகு சகலனும்,
சனுஷ், சனுஜனா, கஷிகா, துஷிகா, துஷிகன், பிரவின், அக்ஷயா, சதுஷனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 11-07-2019 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் கொக்குவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
சகலவளமும் நிறையப்பெற்ற இலங்கையின் வடபால் அமைந்துள்ள யாழ்ப்பாணத்தின் சரவணையில் புகழ் பூத்த சீமான் திரு.ஆறுமுகம் அவர்தம் பாரியார் நாகேஸ்வரி அவர்களின் அருமைப் புத்திரனாக 09/DEC/1948 ஆம் ஆண்டில் திரு.தெட்சணாமூர்த்தி அவர்கள் கிருபாதேவி, நல்லையா, கனகரட்ணம், குணரட்ணம், சகுந்தலாதேவி, அசோகமாலாதேவி மற்றும் மகேந்திரராஜா எனும் அன்பு உடன்பிறப்புகளுடனும் இவ் அழகிய பூமியில் அவதரித்தார்.
அத்துடன் இளமையிலே தன்முயற்சியும் கடின உழைப்பும் தன்னம்பிக்கையும் மிகுந்த இவர் தன் தந்தையுடனுன் சேர்ந்து சொந்தத் தொழிலில் ஈடுபட்டார் மேலும் திரு.திருமதி தம்பையா சொர்ணம்மா தம்பதிகளின் அன்பு மகள் மனோன்மணி அவர்களை பெற்றோரும் உற்றாரும் விரும்பியபடி கரம்பற்றி சந்தோசமாக வாழ்ந்ததன் பயனாக மஞ்சுளா, கரன், மயூரி, மாருதி போன்ற அழகுப் பிள்ளையைப் பெற்று வளர்த்து முகுந்தன், ரசிதா, புஷ்பகரன், சசிக்குமார் என்பவர்களுக்கு திருமணம் முடித்து வைத்து சனுஷ், சனுஜனா, கஷிகா, துஷிகா, துஷிகன்,பிரவின், அக்ஷயா, சதுஷனா போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் திலகம் என அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் இவர் பிரபல வவுனியா வர்த்தகராக - புகையிலைக்கடை, குளப்பிட்டிச் சந்தி பாய்க்கடை உரிமையாளராக விளங்கியதுடன் வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியாகவும் அறிவு நிறைந்தவராகவும் விளங்கினார், குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன், நல்லுள்ளம் நிறைந்தவராக விளங்கியதுடன் சகோதரபாசம் கொண்டும் விளங்கினார். இவ்வாறு மனைவி,பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் உறவுகளைத் தவிக்கவிட்டு 10.07.2019 இல் 70 வயதில் கொக்குவிலில் இறைபதம் அடைந்தார் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.
"சரவணை மண்ணின்
......சரித்திர நாயகனே
அரவணைத்து வாழ்ந்த
......அன்பு உள்ளமே
கரம் பற்றி நடந்தோம்
..... கால்தடம் தனில்
பரமன் பாதமதில்
.....பள்ளி கொண்டீரே"
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

