ஆறுதல்

மரண அறிவித்தல்

தையல்நாயகி மணிவாசகம்பிள்ளை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தையல்நாயகி மணிவாசகம்பிள்ளை

முன்னாள் ஆசிரியை- வேலணை மத்திய கல்லூரி, விபுலானந்த மகாவித்தியாலயம் தெமட்டகொட, கொழும்பு

வயது 8125 டிசம்பர், 1937 – 25 ஜூலை, 2019

பிறந்த இடம்
வேலணை மேற்கு
வாழ்ந்த இடம்
Kingsbury

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், லண்டன் Kingsbury ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தையல்நாயகி மணிவாசகம்பிள்ளை அவர்கள் 25-07-2019 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் பாக்கியம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான சாவகச்சேரி சங்கத்தானை நாகலிங்கம் செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

மணிவாசகம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

சிவகெளரி(லண்டன்), கெளரீசன்(லண்டன்) ஆகியோரின பாசமிகு தாயாரும்,

சிவநாதன்(கனடா) அவர்களின் அன்புச் சகோதரியும்,

மோகன்(லண்டன்), ஜதீசனா(லண்டன்), சயந்தன்(கனடா), சஞ்சய்(கனடா), ஹம்சத்வனி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற சரவணமுத்து, தனபாக்கியம்(இலங்கை), சந்திரபூபதி(இலங்கை), லோகேஸ்வரி(இலங்கை), ஞானசெளந்தரலிங்கம்(லண்டன்), குணமணி(லண்டன்), ஜெயமகாராணி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான சே.க. நாகய்யா, சண்முகம்பிள்ளை, நாகலிங்கம், படியலிங்கம் ஆகியோரின் ஆசை மருமகளும்,

தபினா(லண்டன்), கரிஷ்மா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

திரு. திருமதி. குலவீரசிங்கம்(லண்டன்), திரு. திருமதி, எஸ். என். செல்வராசா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சம்பந்தியும்,

வாலாம்பிகை படியலிங்கம், தில்லையம்மா பொன்னம்பலம், விசாலாட்சி தியாகராஜா, விசுவலிங்கம் சிவக்கொழுந்து ஆகியோரின் பெறாமகளும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

யாழ்ப்பாணத்தின் அழகிய தீவுகளில் ஒன்றும்,கடலுணவுகள்,கால்நடை வளர்ப்பு ,பயன்தரு மரங்கள், மரக்கறித் தோட்டங்கள்,மிளகாய் வெங்காய வயல்கள், என அழகு நிறைந்த வேலணையில் 25/DEC/1937 இல் திரு.திருமதி வைத்திலிங்கம் பாக்கியம் தம்பதிகளின் அருமை மகளாய் தையல்நாயகி அவர்கள் சிவநாதன் எனும் உடன்பிறப்புடன் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் திரு.திருமதி நாகலிங்கம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகன் திரு.மணிவாசகம்பிள்ளை என்பவரைத் திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்ததன் பயனாக சிவகௌரி, கௌரீசன் போன்ற பிள்ளைகளைப் பெற்று கண்ணின் மணி போல் பாதுகாத்து வளர்த்து திருமணம் முடித்து வைத்து தபினா, கரிஷ்மா போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் வேலணை மத்திய கல்லூரியில் கல்வி பயின்ற இவர் S S C வகுப்பில் சிறந்த மாணவியாகவும்,துணிச்சல் மிக்க மாணவிகளில் ஒருவராகவும் விளங்கியதுடன், பல்கலைக்கழகம் சென்று இதே கல்லூரியில் ஆசிரியராக கடமை ஆற்றியது மட்டுமல்லாது கொழும்பு. தெமட்டகொட விபுலானந்த மகா வித்தியாலயத்திலும் ஆசிரியக்கடமை ஆற்றி ஓய்வும் பெற்றதுடன், மணி ரீச்சர் என நாமத்தை மறக்காது அனைவர் மனதிலும் பதிய நடந்து வெற்றி பெற்றார். இவ்வாறு கணவன், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் உற்றார்,உறவினர்கள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 25.07.2019 இல் 81 வயதில் பிரித்தானியாவில் உள்ள Kingsbury நகரில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

வேலணையில் உதிர்த்த
...... வெள்ளை மனமே
பலம்மிகு உள்ளம் கொண்ட
....... பாச உறவே
நலமாக வாழ்ந்து
........நல்லதை ஆற்றி
வலம் வந்து
........ பிரிந்து சென்றீரே

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.