மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தளையசிங்கம் முருகேசு
வயது 8014 நவம்பர், 1938 – 24 ஜூன், 2019
- பிறந்த இடம்
- பருத்தித்துறை
- வாழ்ந்த இடம்
- பரிஸ், Montreal
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris, கனடா Montreal ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தளையசிங்கம் முருகேசு அவர்கள் 24-06-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், முருகேசு சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புத்திரரும், நாகமுத்து சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும்,
பகீரதன், பரணீதரன், ஜீவனி, தீபனி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தாரணி, கவிதா, காண்டீபன், குமணன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற ராசலிங்கம், சிவபாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான தங்கராசா, தம்பிராசா, சின்னத்தம்பி, நடேசு, றோசம்மா, செல்லத்துரை மற்றும் பவளம்(லண்டன்), தங்கச்சியம்மா, தம்பித்துரை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கிஷான், சஞ்சய், பிரவீன், சக்திஷா, மகதி, அஷான், நிகிஷா, நிஹானா, கஸ்வின், கல்கி, கபீஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
இலங்கையின் அழகு நிறைந்த இடமும்,நன்கு படித்த மக்களைக் கொண்டதும்,வீரமும் எழுச்சியும் நிறைந்த மக்களாக விளங்குவதுடன், புகையிலைத் தோட்டம்,வெங்காய வயல்கள் மரக்கறித் தோட்டம்,பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த பருத்தித்துறையில் 14/NOV/1938 ஆம் ஆண்டில் திரு.திருமதி முருகேசு சின்னப்பிள்ளைதம்பதிகளுக்கு அருமை மகனாக திரு.தளையசிங்கம் அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அத்துடன் அன்பும் அழகு நிறைந்த இவர் ராசலிங்கம், சிவபாக்கியம் போன்ற சகோதரங்களுடன் வளர்ந்து பண்பும் நல்லுள்ளமும் கொண்டவராக விளங்கியதுடன், திரு.திருமதி நாகமுத்து சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகள் ரத்தினம் என்பவரைத் திருமணம் முடித்து இன்பமாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து பகீரதன், பரணீதரன், ஜீவனி, தீபனி எனும் அருமையான பிள்ளைகளைப் பெற்று வளர்த்து தாரணி, கவிதா, காண்டீபன், குமணன் போன்றவர்களை திருமணம் முடித்து வைத்து கிஷான், சஞ்சய், பிரவீன், சக்திஷா, மகதி, அஷான், நிகிஷா, நிஹானா, கஸ்வின், கல்கி, கபீஷ் போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் திருநாவுக்கரசு என்றும் அழைக்கப்படும் இவர் சிறந்த அறிவாளியும் அன்புள்ளம் கொண்டவருமான இவர் குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன்,பொது உதவிகள் புரிவதில் அலாதி விருப்பம் கொண்டவராகவும், இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் விளங்கினார். இவ்வாறு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 24.06.2019 இல் 80 வயதில் கனடாவில் உள்ள Montreal நகரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.
நரைத்த மீசை ஒன்று
........நல் உள்ளமது
வரைந்த ஓவியமாய்
........வசந்த காலம் அது
நிறைந்த மனதுடன்
........நிலைத்து வாழ்ந்து
கரைந்த வெண் களியாய்
........காட்சியில் மறைந்தீரே
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

