ஆறுதல்

மரண அறிவித்தல்

தம்பையா சங்கரலிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தம்பையா சங்கரலிங்கம்

ஓய்வுபெற்ற மாநகராட்சி எழுதுவினைஞர்- யாழ்ப்பாணம்

வயது 8416 ஜூலை, 1934 – 5 மே, 2019

பிறந்த இடம்
வேலணை பள்ளம்புலம்
வாழ்ந்த இடம்
கொழும்பு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வேலணை சரவணை பள்ளம்புலத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பெரேரா வீதியை வதிவிடமாகவும் கொண்ட தம்பையா சங்கரலிங்கம் அவர்கள் 05-05-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று வவுனியாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகனும், திருநாவுகரசு மங்கையற்கரசி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மகாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

சிவசுதன், தயா, லதா, கவிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற கலைமகள் அவர்களின் அருமைச் சகோதரரும்,

ஸ்ரீதீபா, ஜீவாகரன், குகநாதன்(உதயன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மகாலிங்கம், தற்பராதேவி மற்றும் காலஞ்சென்றவர்களான இரட்சணியதேவி, கிருபாதேவி, தவநாயகம், கமலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நிருஷா, ரேணுஷா, சாயிதன், ஜெனிபர், ஜெரோஜிதா, அனிஷா, அனுஜன், அருஷா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08-05-2019 புதன்கிழமை அன்று வவுனியாவில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

யாழ்ப்பாணத்தின் அழகிய தீவுகளில் ஒன்றும்,படிப்பறிவு கூடிய மக்களாக விளங்கும் இடமும், கடலுணவுகள்,கால்நடை வளர்ப்பு,பயன்தரு மரங்கள், மரக்கறித் தோட்டங்கள்,மிளகாய் வெங்காய வயல்கள் என அழகு நிறைந்த வேலணை சரவணை பள்ளம்புலத்தில் 16/JUL/1934 இல் தம்பையா மாணிக்கம் தம்பதிகளுக்கு அன்புப் புதல்வனாக சங்கரலிங்கம் அவர்கள் கலைமகள் என்கிற உடன்பிறப்புடன் இவ் அழகு நிறைந்த ஊரில் அவதரித்தார்.

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் மெல்ல மெல்ல வளர்ந்து மிடுக்கான தோற்றத்துடன் பண்பு நிறைந்த நல்லுள்ளம் கொண்டவராக விளங்கியதுடன் திருநாவுகரசு மங்கையற்கரசி தம்பதிகளின் அன்பு மகள் மகாதேவி அவர்களுடன் திருமண பந்தத்தில் இணைந்து இன்பமாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து சிவசுதன், தயா, லதா, கவிதா எனும் அழகுப் பிள்ளைகளைப் பெற்று வளர்த்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் யாழ்/மாநகராட்சி எழுதுவினைஞராக கடமை செய்து ஓய்வு பெற்றதுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் நிறைந்தவராகவும் பொறுமைசாலியாகவும் விளங்கியதுடன், இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் பழைய திரைப்படங்கள் பார்ப்பதில் அலாதி விருப்பம் கொண்டவராகவும், அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டும் விளங்கினார், இவ்வாறு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 05.05.2019 இல் 84 வயதில் கொழும்பில் உள்ள பெரேராவீதியில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

"வேலணை மண்ணின்
......வேங்கை மகனே
கவலை மறந்து
.......சிரித்து மகிழ்ந்த
அன்பு உறவே
.....அழகிய உருவே
கடமை துறந்து பிரிந்ததால்
.......கவலைகள் தந்தீர் மனதினில் "

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.