ஆறுதல்

மரண அறிவித்தல்

தம்பையா தர்மானந்தம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தம்பையா தர்மானந்தம்

வயது 5615 செப்டம்பர், 1962 – 11 ஆகஸ்ட், 2019

பிறந்த இடம்
புதுக்குடியிருப்பு
வாழ்ந்த இடம்
சுவிஸ்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா தர்மானந்தம் அவர்கள் 11-08-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னர் தம்பையா, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், கனகலிங்கம் லீலாவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தயாநிதி அவர்களின் அன்புக் கணவரும்,

மாட்டீனா, ரெல்வின் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சச்சிதானந்தம்(கனடா), காலஞ்சென்ற விவேகானந்தம், பரமானந்தம், அன்னலட்சுமி(புதுக்குடியிருப்பு), காலஞ்சென்ற குணலட்சுமி, மகாலட்சுமி(புதுக்குடியிருப்பு), யோகலட்சுமி(புதுக்குடியிருப்பு), ஜெயலட்சுமி(புதுக்குடியிருப்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நகுலேஷ்வரன், அருள்நிதி, வசந்தினி(சுவிஸ்), நந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

முல்லைத்தீவு மாவட்டத்தின் அழகிய இடமும் நன்கு படித்த மக்களாக விளங்குவதுடன், இறுதிப் போரின் உச்சம் பெற்ற இடமும், நெல்நிலம்,தெங்கு தோட்டம்,மரக்கறித் தோட்டம்,வீட்டுத்தோட்டம் என அழகு நிறைந்த புதுக்குடியிருப்பு 4ஆம் வட்டாரத்தில் 15/SEP/1962 இல் திரு.திருமதி சின்னர் தம்பையா வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனாக திரு.தர்மானந்தம் அவர்கள் இவ் அழகு நிறைந்த ஊரில் மழலையாக அவதரித்தார்.

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் சச்சிதானந்தம்,விவேகானந்தம், பரமானந்தம், அன்னலட்சுமி, குணலட்சுமி, மகாலட்சுமி மற்றும் யோகலட்சுமி, ஜெயலட்சுமி போன்ற உடன்பிறப்புகளுடன் குறும்புகள் செய்து மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவனானதும் திரு.திருமதி கனகலிங்கம் லீலாவதி தம்பதிகளின் அன்பு மகள் தயாநிதி எனும் அழகிய தேவதையுடன் திருமண பந்தத்தில் இணைந்து மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து மாட்டீனா, ரெல்வின் எனும் அழகிய பிள்ளைகளைப் பெற்று மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் நன்கு படித்ததுடன் பல்கலைக்கழகம் சென்று கல்வி கற்றதுடன் நற்பண்பும் ஒழுக்கமும் பெறுமைசாலியும் அறிவும் நிறைந்தவராக விளங்கியதுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கிய இவர் சகோதரபாசம் கொண்டும் விளங்கினார். இவ்வாறு மனைவி, பிள்ளைகள், சகோதரங்கள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 11.08.2019 இல் 56 வயதில் சுவிஸில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிராத்திப்போம்.

கருணை உறவே கடவுள் உருவே
எளிமை மனமே எங்கள் உயிரே
வதன அழகை பார்க்க ஏங்கும்
உனது உறவுகள் ஓவென அழுகிறது
ஒருமுறை வருவாயா திருமுகம் காட்டுவாயா

பிற அறிவித்தல்கள்

  1. 10 செப்டம்பர், 2019நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.