நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தம்பையா ஐயாதுரை
வயது 924 மே, 1927 – 11 நவம்பர், 2019
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- Muar, London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஎம்மை ஆறாத் துயரில் ஆழ்த்தி மீளாத் துயில் கொண்ட தம்பையா ஐயாதுரை அவர்களின் பிரிவுச் செய்தி கேட்டு, நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசி, மின்னஞ்சல், சமூக வலைத்தளங்கள் ஆகியவை மூலமாக எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், சகல நிகழ்வுகளிலும் எம்முடன் கைகோர்த்து இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த உற்றார், உறவினர், நண்பர்களுக்கு எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
சகலவளமும் நிறையப்பெற்ற இலங்கையின் வடபால் அமைந்துள்ள யாழ்ப்பாணத்தில் புகழ் பூத்த சீமான் திரு. தம்பையா அவர்தம் பாரியார் சின்னத்தங்கம் அவர்களின் அருமைப் புத்திரனாக 04/MAY/1927 ஆம் ஆண்டில் திரு.ஐயாதுரை அவர்கள் இவ் அழகிய பூமியில் அவதரித்தார்.
திரு.திருமதி வோல்காட் நடராஜா, சத்யலஷ்மி தம்பதிகளின் அன்பு நிறைந்த மகள் ஜெயகௌரி அவர்களை பெற்றோரும் உற்றாரும் விரும்பியபடி கரம்பற்றி சந்தோசமாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
இருவரின் நல் வாழ்க்கையின் பயனாக சித்ராங்கி, தர்மராஜ், உமா, நிரமலன் போன்ற அன்புப் பிள்ளைகளைப் பெற்று வளர்த்து ராஜசேகரன், தீபா, சுமித்ரன், துஷ்யந்தி என்பவருக்கு திருமணம் முடித்து வைத்து கௌதம், ரஹீல், இனேஷ், ரோஹித், தமாரா, ஏகா, அபிஷய், ஹரிணி, சௌம்யா எனும் பேரப்பிள்ளையுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
மேலும் மலேஷியாவின் Muar நகரில் வசித்துவந்ததுடன் அன்பும் பண்பும் கொண்ட இவர் நகைச்சுவையாக பேசுவதில் வல்லவராகவும், இசைப் பாடல்கள் கேட்பதில் அலாதி விருப்பம் கொண்டவராகவும் விளங்கினார்.
இவ்வாறு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் உறவுகளைத் தவிக்கவிட்டு 11.11.2019 இல் 92 வயதில் பிரித்தானியாவில் உள்ள London நகரில் இறைபதம் அடைந்தார்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

