மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தம்பையா நாகராசா
இளைப்பாறிய ஆசிரியர்
வயது 8914 டிசம்பர், 1929 – 10 ஆகஸ்ட், 2019
- பிறந்த இடம்
- இணுவில் மேற்கு
- வாழ்ந்த இடம்
- இணுவில் கிழக்கு, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். இணுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், இணுவில் கிழக்கை வதிவிடமாகவும், கனடாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட தம்பையா நாகராசா அவர்கள் 10-08-2019 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், இணுவிலைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான தம்பையா செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், தாவடியை சேர்ந்த காலஞ்சென்றவர்களான சிவசம்பு பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
கந்தராஜா(அவுஸ்திரேலியா), யோகராஜா(ஜேர்மனி), இராஜரஞ்சனி(கனடா), தேவராஜா(கனடா), ராஜினி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான நடராசா(இளைப்பாறிய ஆசிரியர்), சண்முகலிங்கம்(இளைப்பாறிய ஆசிரியர்) மற்றும் சிவபுஸ்பம்(இளைப்பாறிய ஆசிரியர்- இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கிருபானந்தி, தர்சிகா, பாலசுப்ரமணியம், றேகா, விக்னராஜா மற்றும் சிவரூபன், சிவானி, சிவமயூரன், சிவரஞ்சன், சிவதர்சினி ஆகியோரின் பாசமிகு மாமனும்,
காலஞ்சென்றவர்களான கமலாம்பிகை, சுகிர்தாம்பிகை மற்றும் சிவசுப்ரமணியம்(இளைப்பாறிய ஆசிரியர்- இலங்கை), காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், இராஜரட்ணம் மற்றும் ராஜலஷ்மி(லண்டன்), இரட்ணேஷ்வரி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற சங்கரசிவம்பிள்ளை, நாகேஷ்வரி(லண்டன்), நாகேஷ்வரன்(லண்டன்), மனோகரன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகலனும்,
இராஜரட்ணம், கனகமணி, காலஞ்சென்ற இராசமணி, சின்னமணி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
பிரணவன், பிரனுஜன், மதுஷன், மிதுரா, சாகித்யா, மயிலோன், ஓவியா, சுருதிகா, ஆருகன், ஆதிரன், ராகவி, தானியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
சகலவளமும் நிறையப்பெற்ற இலங்கையின் வடபால் அமைந்துள்ள யாழ்ப்பாணம் இணுவில் மேற்கில் புகழ் பூத்த சீமான் திரு.தம்பையா அவர்தம் பாரியார் செல்லமுத்து அவர்களின் அருமைப் புத்திரனாக 14/DEC/1929 ஆம் ஆண்டில் திரு.நாகராசா அவர்கள் நடராசா, சண்முகலிங்கம், சிவபுஸ்பம் போன்ற உடன்பிறப்புகளுடன் இவ் அழகிய பூமியில் அவதரித்தார்.
அத்துடன் இளமையிலே தன்முயற்சியும் கடின உழைப்பும் தன்னம்பிக்கையும் மிகுந்த இவர் தன் சகோதரங்களுடன் சேர்ந்து நன்கு படித்து அனைவரும் ஆசிரியர்களானதுடன் இவர் தாவடியை சேர்ந்த திரு.திருமதி சிவசம்பு பார்வதி தம்பதிகளின் அன்பு மகள் கமலாதேவி அவர்களை பெற்றோரும் உற்றாரும் விரும்பியபடி கரம்பற்றி சந்தோசமாக வாழ்ந்ததன் பயனாக கந்தராசா, யோகராஜா, இராஜரஞ்சனி, தேவராஜா, ராஜினி போன்ற அன்புப் பிள்ளைகளை பெற்று வளர்ந்து திருமணம் முடித்து வைத்து பிரணவன், பிரனுஜன், மதுஷன், மிதுரா, சாகித்யா, மயிலோன், ஓவியா, சுருதிகா, ஆருகன், ஆதிரன், ராகவி, தானியா எனும் பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் ஆசிரியத் தொழிலை நன்கு நேசித்து கடமையாற்றி ஓய்வு பெற்றதுடன் அன்பான பேச்சால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவரும் கடின உழைப்பாளியும். கலகலப்பாக பேசுவதும்,தனக்கே உரித்தானபுன்சிரிப்பும் கொண்டதுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார், இவ்வாறு பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள், உற்றார்,உறவினர் நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் உறவுகளைத் தவிக்கவிட்டு 10.08.2019 இல் 89 வயதில் கனடாவில் உள்ள Markham நகரில் இறைபதம் அடைந்தார் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.
கல்வியில் சிறந்த கடமை வீரனே
சொல்லினில் வண்மை தவிர்த்து
நிலையாய் உறவுடன் நின்று
மலையாய் உயர்ந்து மனிதரைப் போற்றி
சிலையாய் ஆகிய சிந்தனை உறவே
கலையாத நினைவுடன் கைகூப்பித் தொழுகிறோம்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

