மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தம்பையா தம்பிப்பிள்ளை
வயது 858 ஆகஸ்ட், 1933 – 31 மே, 2019
- பிறந்த இடம்
- குமுழமுனை
- வாழ்ந்த இடம்
- குமுழமுனை, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமுல்லைத்தீவு குமுழமுனையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், தற்போது கனடாவை வதிவிடமாகவும் கொண்ட தம்பையா தம்பிப்பிள்ளை அவர்கள் 31-05-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை(கிட்டினர்) சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவக்கொழுந்து அவர்களின் அன்புக் கணவரும்,
கமலகுமாரி(கனடா), ஜெயக்குமாரி(இலங்கை), சிறீரஞ்சன்(கனடா), கலாக்குமாரி(கனடா), காலஞ்சென்ற கிஷ்ணரஞ்சன்(கண்ணன்), விஜயரஞ்சன்(கனடா), காலஞ்சென்ற விமலரஞ்சன்(ரவி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற இரத்தினம், நாகேந்திரம்(கனடா), சிறீவதனா(கனடா), லோஜினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான செல்லையா(புளியடி), ராசம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சிவராசா, சிவபாதம்(இலங்கை), சிவசிதம்பரம்(கனடா), சிவஞ்ஞானம்(இலங்கை), சியாமளாகுமாரி(இலங்கை), சிவரஞ்சினிதேவி(இலங்கை), அன்னம், நாகராசா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
றூபினி, விஜயகுமார், யாழினி, விஷ்னுவர்த்தன், ஆரணி, நீரஜா, ஆரபி, மானுஷா, விகாஷ் ஆகியோரின் அன்புப் பேரனும்,
அகிலினி, விதுஷ், வினித், அஷ்மிரா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
முல்லைத்தீவில் அழகிய இடமும்,வளமிகு நிலமும், மக்கள் செறிந்து வாழும் பகுதியும், பயன்தரு மரங்கள்,நெல்வயல்கள், மரக்கறித் தோட்டங்கள்,மிளகாய் வெங்காய வயல்கள் என அழகு நிறைந்த குமுழமுனையில் 08/Aug/1933 ஆம் ஆண்டில் தம்பிப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளுக்கு அன்பு மகனாக தம்பையா அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் செல்லையா,ராசம்மா போன்ற உடன்பிறப்புகளுடன் குறும்புகள் செய்து வளர்ந்து மிடுக்கான தோற்றத்துடன் பண்பு நிறைந்த நல்லுள்ளம் கொண்டவராக விளங்கியதுடன் சிதம்பரப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகள் சிவக்கொழுந்து என்பவரைத் திருமணம் முடித்து இன்பமாக வாழ்ந்து கமலகுமாரி, ஜெயக்குமாரி, சிறீரஞ்சன், கலாக்குமாரி, கிஷ்ணரஞ்சன், விஜயரஞ்சன், விமலரஞ்சன் போன்ற பிள்ளைகளைப் பெற்று பாதுகாத்து வளர்த்து, பெரியவர்களானதும் இரத்தினம், நாகேந்திரம், சிறீவதனா, லோஜினி போன்றவர்களுக்கு திருமணம் முடித்து வைத்து மாமாவிற்குரிய கடமையை சிறப்பாகச் செய்து பேரப்பிள்ளைகள்,பூட்டப்பிள்ளைகளுடன் அன்பாக பேசி மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் அரியகுட்டி என அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் இவர் வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் நிறைந்தவராக விளங்கியதுடன், பழைய திரைப்படங்கள் பார்ப்பதில் அலாதி விருப்பம் கொண்டவராகவும் விளங்கினார் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கினார். இவ்வாறு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 31.05.2019 இல் 85 வயதில் கனடாவில் உள்ள Markham நகரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
குமுழமுனை மண்ணின்
......குலக் கொழுந்தே
குத்து விளக்கே
.......கோவில் சிலையே
நகைச்சுவைப் பேச்சே
........நன்றி உள்ளமே
நாதன் அடி சேர்ந்தீர்
......நாங்கள் கண்ணீர் சிந்தவே
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

