ஆறுதல்

மரண அறிவித்தல்

தம்பையா தியாகராஜா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தம்பையா தியாகராஜா

வயது 9431 ஆகஸ்ட், 1925 – 19 டிசம்பர், 2019

பிறந்த இடம்
வேலணை வடக்கு
வாழ்ந்த இடம்
London

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வேலணை வடக்கு மயிலப்புலத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா தியாகராஜா அவர்கள் 19-12-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா சொர்ணம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அண்ணாமலை நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பரமேஸ்வரி(மகேஸ்-லண்டன்) அவர்களின் பாசமிகு கணவரும்,

மகேந்திரன்(ஜேர்மனி), மனோகரன்(லண்டன்), உதயகுமார்(லண்டன்), இதயகுமார்(லண்டன்), மதியழகி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

அனுசுயா(ஜேர்மனி), சாந்தினி(லண்டன்), சுகந்தினி(லண்டன்), காலஞ்சென்ற இராஜேஸ்வரி, அன்பழகன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான தங்கம்மா, விசாலாட்சி மற்றும் பூங்காவனம், அன்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை, செல்லையா, கைலாயபிள்ளை, தம்பையா, காலஞ்சென்றவர்களான பாக்கியலக்சுமி, சிவசுப்பிரமணியம், சங்கரப்பிள்ளை, கணபதிப்பிள்ளை மற்றும் நவமணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான குமாரசிங்கம், சுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகலரும்,

சறோஜினிதேவி(கனடா), பாலசரஸ்வதி(கனடா), ருக்மணி(கனடா) ஆகியோரின் அன்பு உடன் பிறவாச் சகோதரரும்,

தருண், தர்சிகா, லதுசன், சிந்துசன், மிதுஸ்கா, ஹரினி, லக்ஸ்மிதா, அபிரா, சூரியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

யாழ்ப்பாணத்தின் நான்கு பக்கமும் கடல் அலை தாலாட்டும் அழகிய தீவும்,படித்து கல்வியறிவு கூடிய மக்களாக விளங்குவதும் கடலுணவுகள்,கால்நடை வளர்ப்பு என அழகு நிறைந்த வேலணை வடக்கு மயிலப்புலத்தில் 31/AUG/1925 ஆம் ஆண்டில் திரு.திருமதி தம்பையா தியாகராஜா தம்பதிகளுக்கு அழகு மகனாக திரு.தியாகராஜா அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் தங்கம்மா, விசாலாட்சி மற்றும் பூங்காவனம், அன்னம்மா எனும் சகோதரங்களுடன் வளர்ந்து பண்பும் நல்லுள்ளமும் கொண்டவராக விளங்கியதுடன்,திரு.திருமதி அண்ணாமலை நாகம்மா தம்பதிகளின் தம்பதிகளின் மகளான பரமேஸ்வரி(மகேஸ்) எனும் அழகிய தேவதையைத் திருமணம் முடித்து இன்பமாக வாழ்ந்து வந்தனர்.

முழுக் கதையையும் வாசிக்க

இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வந்ததன் பயனாக மகேந்திரன், மனோகரன், உதயகுமார், இதயகுமார், மதியழகி எனும் அன்புப் பிள்ளையைப் பெற்று வளர்த்து பெரியவர்களானதும்,அனுசுயா, சாந்தினி, சுகந்தினி, இராஜேஸ்வரி, அன்பழகன் என்பவரைத் திருமணம் முடித்து வைத்து தருண், தர்சிகா, லதுசன், சிந்துசன், மிதுஸ்கா, ஹரினி, லக்ஸ்மிதா, அபிரா, சூரியா போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

மேலும் கடின உழைப்பாளியும், குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்தது மட்டுமல்லாது இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கினார்.

இவ்வாறு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்,உற்றார், உறவினர், என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 19.12.2019 இல் 94 வயதில் பிரித்தானியாவில் உள்ள London நகரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்

வேலணை மண்ணின் வேங்கை அழகே
காரிருள் போக்கிய எங்கள் கருணை உறவே
வாரி வழங்கிய வள்ளள் அருளே
நேரில் பார்த்தால் நிம்மதி கூட்டும்
யார் இவர் எமைப் பெற்ற மாவீரன்
போனீரே அனைவரையும் பிரிந்து.

பிற அறிவித்தல்கள்

  1. 17 ஜனவரி, 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.