மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தம்பிப்பிள்ளை இராசம்மா
வயது 7618 ஆகஸ்ட், 1940 – 10 செப்டம்பர், 2016
- பிறந்த இடம்
- நெடுந்தீவு
- வாழ்ந்த இடம்
- ஸ்கந்தபுரம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி ஸ்கந்தபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை இராசம்மா அவர்கள் 10-09-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, கண்மணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பசுபதி சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தம்பிப்பிள்ளை(ஓய்வுபெற்ற நீர்ப்பாசன அலுவலர்) அவர்களின் அன்பு மனைவியும்,
உதயமூர்த்தி(ஆசிரியர்- கிளிநொச்சி) அவர்களின் பாசமிகு தாயாரும்,
புஸ்பலதா(ஆசிரியர்- கிளிநொச்சி) அவர்களின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான நாகேந்திரன், தியாகராஜா, அருமைத்துரை, கோமளம், கருணாநிதி, குழந்தை புனிதவதி(நெடுந்தீவு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான அன்னப்பிள்ளை, சேதுபதி, பராசக்தி, பாலுப்பிள்ளை, மற்றும் அபிராமி(உருத்திரபுரம்), மலர்(கிளிநொச்சி) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-09-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பி.ப 01:00 மணியளவில் ஸ்கந்தபுரம் பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 111,
ஸ்கந்தபுரம்,
கிளிநொச்சி.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

