31ம் நாள் நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
தம்பிப்பிள்ளை சீவரெத்தினம்
ஓய்வுபெற்ற அதிபர்
வயது 8811 மே, 1928 – 9 பிப்ரவரி, 2017
- பிறந்த இடம்
- மட்டக்களப்பு
- வாழ்ந்த இடம்
- மட்டக்களப்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமட்டக்களப்பு வந்தாறுமூலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தம்பிப்பிள்ளை சீவரெத்தினம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
முத்தே ரத்தினமே
குடும்ப ஒளி விளக்கே
பாசத்தின் உறைவிடமே
நீங்கள் எம்மை விட்டுப் போய்
மாதம் ஒன்று ஆனதுவே!
குடும்பத்திற்கு சிறந்ததோர் தலைவனாய்
உறவுகளுக்கு நல்லதோர் வழிகாட்டியாய்
பிள்ளைகளுக்கு எடுத்துக்காட்டான தந்தையாய்
எங்களை வழிநடத்திய அன்புத் தெய்வமே
எம்மையெல்லாம் ஆரத் தழுவி
அறிவுரைகள் பல தந்து அவணியில்
பெயர் சொல்ல வைத்த அப்பிச்சே!
ஐந்து செல்வம் பெற்றெடுத்த தெய்வமே
சீவரெத்தினம் எனும் பெயர் தொடுத்த உத்தமனே
தேடியே தந்த மருமக்கள் மனம் நோகின்றன
எம்மைத் துக்கி வளர்த்த கரத்தால் ஆரத்தழுவிய
பேரப்பிள்ளைகள் அழுகின்றனர்
எம்மை விட்டு நீங்கள் பிரிந்தாலும் மங்காத
நினைவுகளுடன் என்றும் வாழ்வீர்கள் எம்முடன்!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
உங்கள் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கின்றோம்.
மனைவி, மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
அன்னாரின் இறுதிக்கிரியையில் பங்குபற்றியோருக்கும், தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டவர்களுக்கும், இறுதிச் சடங்கில் உதவிகளை வழங்கியோருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக்கிரியை 11-03-2017 சனிக்கிழமை அன்று வந்தாறுமூலை பிரதான வீதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

