மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தம்பிபிள்ளை சின்னதுரை
வயது 859 ஏப்ரல், 1934 – 6 மே, 2019
- பிறந்த இடம்
- தையிட்டி
- வாழ்ந்த இடம்
- யாழ்ப்பாணம், பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். காங்கேசன்துறை தையிட்டியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிபிள்ளை சின்னதுரை அவர்கள் 06-05-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பிபிள்ளை, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும், காலஞ்சென்ற மனுவேற்பிள்ளை, றோசம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
ஜெயமணி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெயந்தி(இலங்கை), வசந்தி(லண்டன்), செவ்வந்தி(பிரான்ஸ்), சாந்தி(பிரான்ஸ்), ஆனந்தி(லண்டன்), றுபேந்தி(கனடா), தமயந்தி(லண்டன்), ரவி(பிரான்ஸ்), பவாணி(பிரான்ஸ்), சுமதி(இலங்கை), யூட்(குலேன்- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம், சின்னையா, சின்னம்மா, மாணிக்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற இறையாசி, அழகம்மா(இலங்கை), காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, நவரட்டிணம், திரேசம்மா மற்றும் புஸ்பம்(பிரான்ஸ்), காலஞ்சென்ற ஜெயரட்ணம், அரியரெட்ணம்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
விக்ரர்(இலங்கை), யோகநாதன்(இலங்கை), கந்தசாமி(பிரான்ஸ்), புவனேஸ்வரன்(பிரான்ஸ்), ஆனந்தநாயகம்(லண்டன்), லோகேந்திரன்(கனடா), சரவணபவான்(லண்டன்), சூரியலதா(பிரான்ஸ்), இரட்ணசிங்கம்(பிரான்ஸ்), யூட்(இலங்கை), றொசிற்றா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சந்திராதேவி, இராசகுமார், ஜெயக்குமார், றஞ்சினிதேவி, ரவீந்திரன் ஆகியோரின் சிறிய தந்தையும்,
சத்தியானந்தமலர், இராஜகுலதேவி, விமலாதேவி, இந்திராதேவி, சாந்தினிதேவி, சறோஜினிதேவி, குமரகுலசிங்கம், குணசிங்கம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அனற், அஜித், சிறாணி, ராஜன், ஜோதினி, அருட்சகோதரி நிஷாந்தினி(செபமாலைக் கன்னியர்சபை), பிரபா, கனிஸ்ரா, சதீஸ், சந்துரு, பிரியா, சஞ்யு, சயு, ராஜி, ராஜா, லக்ஷி, தர்சன், குறோசன், தாரினி, காயத்திரி, றொமான், றொமினா, சஜி, சோபினா, குலேந்தினி, பிருந்தா, ஹரிஷ், கிறிஷா, றைசா, கென்ஸா, அபிஷா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
ஷகான், ஷவீன், மக்டலினி, அனுஷியன், அனோஷியன், ஷியானு, றெகாணா, திஷாந்தன், றிதுஷன், அஜய், அருண், அனுஷா, எர்வின், கல்வின், யோகான், லேயா, மக்சோன்ஸ், எமா, எவான், எல்வின், செறோன், அசின், எய்மி, ஏட்ரியன், ஏவா, டியா, தசா, யோசுவா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
வாழ்க்கை வரலாறு
இலங்கையின் அழகு நிறைந்த இடமும்,படித்த மக்களை அதிகம் கொண்டதும்,வாழைத்தோட்டம்,வெங்காய வயல்கள் மரக்கறித் தோட்டம்,பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த யாழ். காங்கேசன்துறை தையிட்டியில் 09/APR/1934 இல் தம்பிபிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளுக்கு கனிஷ்ட புதல்வனாக சின்னதுரை அவர்கள் பொன்னம்பலம், சின்னையா, சின்னம்மா, மாணிக்கம் ஆகிய உடன்பிறப்புகளுடன் இவ் அழகு நிறைந்த ஊரில் அவதரித்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் மெல்ல மெல்ல வளர்ந்து மிடுக்கான தோற்றத்துடன் பண்பு நிறைந்த நல்லுள்ளம் கொண்டவராக விளங்கியதுடன் மனுவேற்பிள்ளை றோசம்மா தம்பதிகளின் அன்பு மகள் ஜெயமணி அவர்களுடன் திருமண பந்தத்தில் இணைந்து இன்பமாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து ஜெயந்தி, வசந்தி, செவ்வந்தி, சாந்தி, ஆனந்தி, றுபேந்தி, தமயந்தி, ரவி, பவாணி, சுமதி, யூட் எனும் அழகுப் பிள்ளைகளைப் பெற்று வளர்த்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் நிறைந்தவராகவும் பொறுமைசாலியாகவும் விளங்கியதுடன், இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் பழைய திரைப்படங்கள் பார்ப்பதில் அலாதி விருப்பம் கொண்டவராகவும்,அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டும் விளங்கினார், இவ்வாறு மனைவி,பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள்,பூட்டப்பிள்ளைகள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 06.05.2019 இல் 85 வயதில் பிரான்ஸில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
"காங்கேசன் துறையின்
......காங்கேயக் காளை
காலம் முழுவதும்
.......உழைத்த உறவு
காலன் மடியில்
.....மீளாத் துயரால்
கவலைகள் தந்தீர்
....... கடமை உள்ளமே"
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

