மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தம்பிப்பிள்ளை சிவராசா
வயது 686 அக்டோபர், 1950 – 8 மே, 2019
- பிறந்த இடம்
- ஏழாலை
- வாழ்ந்த இடம்
- ஜேர்மனி, London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை சிவராசா அவர்கள் 08-05-2019 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற நவரட்ணம், ஜெயலட்சுமி(ஊரெழு) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நந்தினி(கலா- ஊரெழு) அவர்களின் அன்புக் கணவரும்,
கோபிராஜ், துஷாரா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அனோஜன், சரண்யா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற தங்கரத்தினம், பரமேஸ்வரி(ஏழாலை), சிவலிங்கம்(கொக்குவில்), பராசக்தி(ஏழாலை), சிவஞானம்(கனடா), காலஞ்சென்ற சிவானந்தம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், பற்குணராசா(ஏழாலை), அம்பிகாதேவி(கொக்குவில்), காலஞ்சென்ற மகேசன், கனகாம்பிகை(கனடா), அருந்தவமலர்(ஏழாலை), நந்தகுமார்(இங்கிலாந்து), மாலினி(இங்கிலாந்து) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கலாதேவி(இங்கிலாந்து), சுரேஷ்குமார்(இங்கிலாந்து) ஆகியோரின் அன்புச் சகலனும்,
டியானா, டேவேஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
இலங்கையின் அழகு நிறைந்த இடமும்,நெல்வயல்கள்,வாழைத்தோட்டம், வெங்காய வயல்கள் மரக்கறித் தோட்டம்,பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த யாழ்.ஏழாலையில் 06/OCT/1950 இல் தம்பிப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளுக்கு அன்புப் புதல்வனாக சிவராசா அவர்கள் தங்கரத்தினம், பரமேஸ்வரி, சிவலிங்கம், பராசக்தி, சிவஞானம், சிவானந்தம் போன்ற உடன் பிறப்புகளுடன் இவ் அழகு நிறைந்த ஊரில் அவதரித்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் மெல்ல மெல்ல வளர்ந்து மிடுக்கான தோற்றத்துடன் பண்பு நிறைந்த நல்லுள்ளம் கொண்டவராக விளங்கியதுடன், நவரட்ணம் ஜெயலட்சுமி தம்பதிகளின் அன்பு மகள் நந்தினி அவர்களுடன் திருமண பந்தத்தில் இணைந்து இன்பமாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து கோபிராஜ், துஷாரா ஆகிய பிள்ளைகளை பெற்று வளர்த்ததுடன், அனோஜன், சரண்யா போன்றவர்களுக்கு திருமணம் முடித்து வைத்து மாமாவிற்குரிய கடமையை சிறப்புற செய்ததுடன்.டியானா, டேவேஷ் போன்ற பேரப்பிள்ளைகளோடு மகிழ்வுற்று வாழ்ந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார், குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கினார். இவ்வாறு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 08.05.2019 இல் 68 வயதில் பிரித்தானியாவில் உள்ள லண்டன் நகரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
"ஏழாலை தந்த
.... எங்கள் உறவே
எல்லோர் மீதும்
......அன்பு கொண்டு
பாசம் கொண்ட
....இரக்க குணமே
எம்மை விட்டு
....எங்கே சென்றீர் "
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

