1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
தம்பிபிள்ளை சுப்பிரமணியம்
வயது 799 நவம்பர், 1939 – 14 ஏப்ரல், 2019
- பிறந்த இடம்
- கைதடி தெற்கு
- வாழ்ந்த இடம்
- கைதடி தெற்கு, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கைதடி தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்டிருந்த தம்பிபிள்ளை சுப்பிரமணியம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று கடந்தாலும்
ஆறிடுமோ உங்கள் நினைவலைகள் அப்பா!
கண்ணின் மணிபோல்
எம்மை காத்த அன்புத்தெய்வமே
ஆறிடுமோ எங்கள் துயரம்
நீங்கள் பிரிந்து ஒரு வருடம் ஓடிப் போனது
இன்னமும் நம்பவே முடியாமல்
நாங்கள் இங்கே தவிக்கின்றோம்.
ஆண்டுகள் பல சென்றாலும்
நீங்காது உங்கள்
நினைவுகளும், நிகழ்வுகளும்
உங்கள் ஆத்மா சாந்தியடைந்து இறைவனடி சேர எல்லாம் வல்ல
இறைவனை வேண்டி தினமும் உங்கள் பாதம் பணிகின்றோம்.
உங்கள் பிரிவால் துயருறும்
மனைவி, மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், உறவினர்கள்.
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணத்தில் அழகிய தென்மராட்சியில் நெல்வயல்கள், தொங்குத்தோட்டம், மிளகாய்தோட்டம், மரக்கறி தோட்டம் என செழிப்பு மிகு கைதடி தெற்கில் 09-11-1939 இல் தம்பிபிள்ளை முத்துபிள்ளை தம்பதிகளுக்கு அன்புப் புதல்வனாய் சுப்பிரமணியம் அவர்கள் இரத்தினம், தாமோதரம்பிள்ளை, சிவகோசரியார், அமிர்தலிங்கம், சிவபாக்கியம், முத்துக்குமாரசாமி ஆகிய உடன் பிறப்புடன் இவ் அழகு நிறைந்த ஊரில் அவதரித்தார்.
மேலும் அன்பும் ஆளுமையும் நிறைந்த இவர் வளர்ந்து மிடுக்கான தோற்றத்துடன் அழகிய வாலிபனானதும் கதிர்காமத்தையன் சின்னம்மா தம்பதிகளின் அழகுப் பெண்ணான கமலேஸ்வரி அவர்களை திருமணம் முடித்து இனிமையாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து சிறிசிவ ஸ்வரன், சிறீதரன், ஜெயமதி, மதிவாணி, கௌசிகன், திருசாந்தி எனும் அன்பு நிறைந்த பிள்ளைகளைப் பெற்றெடுத்து பாசமாகவும் பண்பாகவும் பாதுகாத்து வளர்த்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
நடுவில் என அனைவராலும் அழைக்கப்படும் இவர் கடின உழைப்பாளியாக திகழ்ந்ததுடன் வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் நிறைந்தவராகவும் பெறுமைசாலியாகவும் அறிவு நிறைந்தவராகவும் விளங்கினார், குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டவர்.
இவ்வாறு மனைவி, பிள்ளைகள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 14.04.2019 இல் 79 வயதில் கனடாவில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.
"கைதடி உறவே
கலங்கா உள்ளமே
மனித குலத்தின்
மகத்தான உயிரே
அருமை உறவே
ஆருயிர் மலையே
உங்கள் நினைவில்
உள்ளம் உருகிறது "
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

