31ம் நாள் நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
தம்பித்துரை தேவதாசன்
வயது 6819 ஏப்ரல், 1942 – 10 செப்டம்பர், 2010
- பிறந்த இடம்
- பாசையூர்
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்ப்பாணம் பாஷையூரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பித்துரை தேவதாசன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
எமது தந்தையின் பிரிவுதனை தொலைபேசி மூலம் அறியத்தந்த உறவுகளுக்கும், எமக்கு தொலைபேசி மூலமும் நேரில் வந்தும் ஆறுதல் கூறிய அன்பு உள்ளங்களுக்கும், தந்தையின் நல்லடக்கத்தில் கலந்துக்கொண்டு எம்மை தேற்றிய அனைவருக்கும், பல சிரமங்கள் மத்தியிலும் பல மைல்கள் கடந்து வந்த பாச உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் எமது இதயத்தின் அடித்தளத்தில் இருந்து நன்றிதனை தெரிவித்துக்கொள்கிறோம்.
எமது தந்தையின் ஆத்மசாந்திக்காக 10.10.2010 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10:30 மணிக்கு EGLISE SAINT MARTIN (PLACE DE L'EGLISE - 77270, VILLEPARISIS) எனும் தேவாலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, அதன்பின் 16 AVENUE DES ALPES, 77270 VILLEPARISIS இல் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெறும் உபசரிப்பில் எமக்கு ஆறுதல் வழங்கிய அன்பு உள்ளங்கள் அனைவரையும் கலந்துக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
(முக்கிய குறிப்பு:
எமக்கு தொலைபேசியிலும், நேரில் வந்தும் நல்லடக்கத்திலும் கலந்துகொண்ட பலரை எம்மால் தொடர்புக்கொள்ள முடியாமல் உள்ளமையால் இவ்வறிவித்தலை ஏற்றுக்கொண்டு எல்லோரையும் கலந்துக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.)
— மனைவி, பிள்ளைகள்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

