மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தம்பு பாலசிங்கம்
வயது 8424 பிப்ரவரி, 1935 – 24 செப்டம்பர், 2019
- பிறந்த இடம்
- அல்வாய் வடக்கு
- வாழ்ந்த இடம்
- அல்வாய் வடக்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அல்வாய் வடக்கு மகாத்மா வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தம்பு பாலசிங்கம் அவர்கள் 24-09-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பு, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற குமாரன், சிவப்பி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற முத்துப்பிள்ளை(குணம்), மீனாட்சியம்மா ஆகியோரின் அன்புக் கணவரும்,
சாரதமணி, இளங்கோவன், ஈழகேசன்(லண்டன்), இளந்திரையன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பர்வதம், சரஸ்வதி, கந்தசாமி மற்றும் கனகரத்தினம்(ஓய்வுபெற்ற அதிபர்), சின்னராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
புஸ்பரத்தினம், சந்திரகலா(லண்டன்), அனுஜா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
துஸ்யந்தி, தாரணி(அபிவிருத்தி உத்தியோகத்தர் கண்டாவளை), வானதி(பிரான்ஸ்), வனஜா(பிரான்ஸ்), நாதகோபன்(பிரான்ஸ்), துவாரகன், வசந்தன்(லண்டன்), நளாயினி(லண்டன்), சஜிந்(லண்டன்), வர்ஷா(லண்டன்), வருஷ்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும்,
தூபிகா, பாலேந்தினி, மேகவர்ணன், குபேரன், ஜெபிசா, திபிஷா, கர்ஷயா ஆகியோரின் அன்புப் பூட்டனும்,
சலோமி அவர்களின் அன்புப் பாட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-09-2019 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சுப்பர் மடம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணம் அல்வாய் வடக்கு மகாத்மா வீதியில் 24/FEB/1935 இல் தம்பு பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனாக பாலசிங்கம் அவர்கள் இவ் அவனியில் அவதரித்தார். பர்வதம், சரஸ்வதி, கந்தசாமி, கனகரத்தினம், சின்னராசா எனும் சகோதரங்களுடன் குறும்புகள் செய்து வளர்ந்து வந்தார்.
இவர் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவரானதும் முத்துப்பிள்ளை, மீனாட்சியம்மா ஆகியோரைத் திருமணம் முடித்து, சந்தோசமாக வாழ்ந்ததன் பயனாக சாரதமணி, இளங்கோவன், ஈழகேசன், இளந்திரையன் போன்ற அன்பு பிள்ளைகளைப் பெற்று பாதுகாத்து வளர்த்து, புஸ்பரத்தினம், சந்திரகலா, அனுஜா போன்றவர்களைத் திருமணம் முடித்து வைத்து, துஸ்யந்தி, தாரணி, வானதி, வனஜா, நாதகோபன், துவாரகன்,வசந்தன், நளாயினி, சஜிந், வர்ஷா, வருஷ் எனும் பேரப்பிள்ளைகளுடனும், தூபிகா, பாலேந்தினி, மேகவர்ணன், குபேரன், ஜெபிசா, திபிஷா, கர்ஷயா போன்ற பூட்டப்பிள்ளைகளுடனும், சலோமி என்ற குழந்தைக்கு பாட்டனாராகவும் இருந்து இவர்களோடு மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
தனது அன்பான பேச்சால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவரான இவர், எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவர்.மேலும் வாழ்வில் அன்பும் கருணையும் கொண்டு உதவிகள் செய்து, குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்தார்.இவ்வாறு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் என மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவர் 24.09.2019 இல் 84 வயதில் யாழ்ப்பாணம் அல்வாயில் காலமானார்.
"ஆலம் விழுதுகள் போல்
ஆயிரம் உறவுகள் கொண்டு
குடும்ப உறவுகள் வீழ்ந்துவிடாதிருக்க
வேரென இருந்தாயே நீயே
மாயப் புயல் வடிவில்
காலனவன் உயிர்பறிக்க
சோகத்தில் உன் உறவுகள் துடிதுடிக்க
சொல்லாமல் சென்றாயோ
உமை இங்கு இழந்துவிட்டோம்
இனி எங்கு காண்போமோ"
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

