31ம் நாள் நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
தம்பு கணபதிப்பிள்ளை
வயது 6722 ஆகஸ்ட், 1948 – 23 டிசம்பர், 2015
- பிறந்த இடம்
- நெடுந்தீவு
- வாழ்ந்த இடம்
- Pavaikulam
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், வவுனியா பாவற்குளம் 9ம் வட்டாரத்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த தம்பு கணபதிப்பிள்ளை அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்.
தூரம்போய் திரும்பி வருவீர்கள் என
நினைத்து காத்திருக்கிறோம்,
நாட்கள் கடந்தாலும்
உம் நினைவுகள் எம்முடனே,
எம்மைவிட்டு போகவில்லை - அப்பா
நீங்கள் எம்முடன் இருக்கிறீர்கள்
பாசத்தோடு எம்மை காத்து வந்த
எங்கள் அன்புத் தந்தையே..!
தனியாகத் தவிக்கவிட்டு ஏனப்பா சென்றீர்கள்
இன்னும் பல ஆண்டுகள் எம்மோடு இருப்பீர்கள்
என்றல்லவா நினைத்தோம்..!
கண்ணிமைக்கும் நேரத்தில் காலன் கொண்டுசென்றான்..
கடைசி நிமிடம் என்ன சொல்ல
நினைத்திருப்பீர்கள்...!
நினைத்துப்பார்க்கிறோம்...
நீங்கள் வாழ்ந்தது உங்களுக்காக அல்ல
எங்களுக்காகவே.
ஆத்மசாந்திக்காக பிரார்த்திக்கும் பிள்ளைகள்....
அன்னாரின் அந்தியேட்டிக்கிரியை 20-01-2016 புதன்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக் கரையில் நடைபெற்று பின்னர் 22-01-2016 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும். இந் நிகழ்விலும் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 77, அரசடிகுளம்,
செட்டிகுளம்,
வவுனியா.
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

