ஆறுதல்

மரண அறிவித்தல்

தம்பு செல்லத்துரை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தம்பு செல்லத்துரை

வயது 8425 டிசம்பர், 1934 – 5 ஜூலை, 2019

பிறந்த இடம்
வண்ணார்பண்ணை
வாழ்ந்த இடம்
கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வண்ணார்பண்ணை சீனியர் லேன் கலட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பு செல்லத்துரை அவர்கள் 05-07-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பு, பார்வதி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, பாக்கியம் தம்பதிகளின் மூத்த மருமகனும்,

நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற மாரிமுத்து, நாகலிங்கம், இராசம் மற்றும் செல்லம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற நாகராசா(விஞ்ஞானி- இலங்கை) மற்றும் மகேஸ்வரி(இலங்கை), யோகேஸ்வரி(இலங்கை), ஞானசேகரம்(பவா- டென்மார்க்), நாகதேவி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கதிர்காமநாதன்(டென்மார்க்), அம்பிகை(கனடா), ஜெகதீஸ்வரன்(லண்டன்), உமாகரன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஸ்ரீதர்(ரகு), சியாமளா, செல்வமதி, மீரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சர்மினி, மெலிசா, நிலுசா, மீனுசா, அபிலாஸ், சௌமியா, கபிஷன், றீனுசா, அபினேஸ், ஆர்த்திகன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

சகலவளமும் நிறையப்பெற்ற இலங்கையின் வடபால் அமைந்ததுள்ள யாழ்ப்பாணத்தின் வண்ணார்பண்ணையில் புகழ் பூத்த சீமான் திரு.தம்பு அவர்தம் பாரியார் திருமதி பார்வதி அவர்களின் அருமைப் புத்திரனாக 25/DEC/1934 ஆம் ஆண்டில் திரு.செல்லத்துரை அவர்கள் மாரிமுத்து, நாகலிங்கம், இராசம், செல்லம் எனும் அன்பு உடன்பிறப்புகளுடனும் இவ் அழகிய பூமியில் அவதரித்தார்.

அத்துடன் இளமையிலே தன்முயற்சியும் கடின உழைப்பும் தன்னம்பிக்கையும் மிகுந்த இவர் தன் தந்தையுடன் சேர்ந்து சொந்தத் தொழிலில் ஈடுபட்டார் மேலும் திரு.திருமதி சின்னத்தம்பி பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகள் நாகேஸ்வரி அவர்களை பெற்றோரும் உற்றாரும் விரும்பியபடி கரம்பற்றி சந்தோசமாக வாழ்ந்ததன் பயனாக கதிர்காமநாதன், அம்பிகை, ஜெகதீஸ்வரன், உமாகரன் எனும் அழகுப் பிள்ளையைப் பெற்று வளர்த்து ஸ்ரீதர், சியாமளா, செல்வமதி, மீரா என்பவர்களுக்கு திருமணம் முடித்து வைத்து சர்மினி, மெரிசா, நிலுசா, மீனுசா, அபிலாஸ், சௌமியா, கபிஷன், றீனுசா, அபினேஸ், ஆர்த்திகன் போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியாகவும் அறிவு நிறைந்தவராகவும் விளங்கினார், குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன், பொறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கியதுடன் சகோதரபாசம் கொண்டும் விளங்கினார். இவ்வாறு மனைவி,பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் உறவுகளைத் தவிக்கவிட்டு 05.07.2019 இல் 84 வயதில் கனடாவில் உள்ள Brampton நகரில் இறைபதம் அடைந்தார் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.

"பளிச்சிடும் மீசையும்
......நேர்கொண்ட பார்வையும்
விழித்திடும் கண்ணும்
......வீரச் செயலும்
எளிமை வாழ்வும்
..... ஏந்தல் உள்ளமும் கொண்டவரே
பிரிந்தீர் எமை விட்டு
.....வருந்துகிறோம் உமை நினைந்து"

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.