ஆறுதல்

மரண அறிவித்தல்

தாமோதரம்பிள்ளை ஜெகதீஸ்வரன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தாமோதரம்பிள்ளை ஜெகதீஸ்வரன்

B.Sc Honours Chemistry Special University of Peradeniya

வயது 5424 செப்டம்பர், 1966 – 22 டிசம்பர், 2020

பிறந்த இடம்
நெடுந்தீவு
வாழ்ந்த இடம்
கண்டி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கண்டியை வதிவிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை ஜெகதீஸ்வரன் அவர்கள் 22-12-2020 செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை(சந்தைக் கடை செல்லத்துரை) தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும்,

ரதிதேவி(ஓய்வுபெற்ற ஆசிரியை, இலங்கை), கேதீஸ்வரன்(ஓய்வுபெற்ற ஆசிரியர், இலங்கை), சந்திரேஸ்வரன்(கனடா), குலதேவி(கனடா), சறோசாதேவி(ஆசிரியை இலங்கை), குகனேஸ்வரன்(கனடா), உலகேஸ்வரன்(பெல்ஜியம்) ஆகியோரின் ஆருயிர்ச் சகோதரரும்,

ஜீவரட்ணம்(ஓய்வுபெற்ற கிராம சேவகர், இலங்கை), நளாயினி(ஓய்வுபெற்ற ஆசிரியை, இலங்கை), மாலா(கனடா), தர்மசீலன்(கனடா), சோதிராஜா(ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகர், இலங்கை), நித்தியகலா(கனடா), கிருஸ்ணகுமாரி(பெல்ஜியம்) ஆகியோரின் ஆசை மைத்துனரும்,

நிரோசினி, சரண்யா, ஹரிசன், பிரார்த்தனன், மதுசனன், டிலுக்சன் ஆகியோரின் பாசமிகு தாய் மாமனும்,

ஹிசோபன், ஜனுசாந்த், வதுசென், மதுசென் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

திசானி, டயானி, பிரியங்கா, சாரங்கா, அருளங்கா, துவாரங்கா, சங்கித் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

ஆதவ், ஜக்சவி, அரோண், அபிரா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்ற பேரம்பலம், பரமலிங்கம், இலட்சுமணன் ஆகியோரின் அன்பு மருமகனும்,

கமலாவதி(கிளி) அவர்களின் அன்புப் பெறாமகனும்,

பிரமளாதேவி(கனடா), யமுனாதேவி(கனடா), கஜேந்திரன்(கனடா), மீனலோஜினி(இலங்கை) ஆகியோரின் உடன் பிறவாச் சதோதரரும்,

காலஞ்சென்றவர்களான துரையப்பா, பொன்னம்பலம் ஆகியோரின் பெறாமகனும்,

காலஞ்சென்றவர்களான செல்லக்கண்டு, இலட்சுமி, முத்துப்பிள்ளை ஆகியோரின் மருமகனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-12-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 07:00 மணிமுதல் மு.ப 10:00 மணிவரை இல. 5 வள்ளுவர் கோட்டம், பெரிய குளம், திருகோணமலையில் நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை திருகோணமலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கேட்டுக்கொள்கின்றோம்

வாழ்க்கை வரலாறு

யாழ் நெடுந்தீவு மேற்கு மகேஸ்வரி வித்தியாலயத்தில் ஆரம்ப கல்வியை தொடங்கினார். பின் நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயத்தில் தொடர்ந்து பயின்று உயர் கல்வியை யாழ் இந்துக் கல்லூரியில் முடித்தார். அங்கு சிறந்த தேர்ச்சியை பெற்று பேராதனை பல்கலைக் கழகத்தில் ஆங்கில மொழியில் இரசாயணவியலில் சிறப்புப் பட்டப்படிப்பை நிறைவு செய்தார்.

இரசாயணவியலில் சிறந்த ஆசிரியராக திகழ்ந்த இவர் பல்லாயிரக் கணக்கான உயர்தர மாணவர்களுக்கு உயர்வுக்கு உறுதுணையாக இருந்தார். அத்துடன் உயர்தர மாணவர்களுக்கு மூன்று மொழியிலும் இரசாயணவியலில் புத்தகங்களை அச்சிட்டு வெளியிட்டார்.

முழுக் கதையையும் வாசிக்க

'ஜெகா மாஸ்ரர் கெமிஸ்ரி ஸ்பெசல்" என்ற பட்டத்துடன் கொழும்பு, வவுனியா, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் தனது சேவையை தொடர்ந்து ஆற்றிவந்தார்.

பிற அறிவித்தல்கள்

  1. 20 ஜனவரி, 2021நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.