நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தம்பிஐயா பாலகிருஷ்ணன்
ஆச்சாரியார்
வயது 6529 செப்டம்பர், 1954 – 29 அக்டோபர், 2019
- பிறந்த இடம்
- உடுவில்
- வாழ்ந்த இடம்
- நெதர்லாந்து
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஅன்னாரின் மரணச்செய்தி கேட்டு, இல்லம் நாடி ஓடோடி வந்து கண்ணீர் சிந்தியவாறு எமக்கு ஒத்தாசைகள் புரிந்தவர்களுக்கும் ஆறுதலும், தேறுதலும் கூறிய அன்புள்ளங்கள் அனைவருக்கும், தொலைபேசி, அனுதாப அட்டைகள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக அனுதாபம் தெரிவித்த உள்நாட்டு, வெளிநாட்டு உறவினர் நண்பர்கள் அனைவருக்கும், கண்ணீர் அஞ்சலி பிரசுரித்த அன்பர்களுக்கும், மலர்வளையம் வைத்து அஞ்சலி செய்தோருக்கும், மற்றும் இறுதிநிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
சகலவளமும் நிறையப்பெற்ற இலங்கையின் வடபால் அமைந்துள்ள யாழ்ப்பாணத்தின் உடுவிலில் புகழ் பூத்த சீமான் திரு. தம்பிஐயா அவர்தம் பாரியார் தங்கம்மா அவர்களின் அருமைப் புத்திரனாக 29/SEP/1954 ஆம் ஆண்டில் திரு.பாலகிருஷ்ணன் அவர்கள் இவ் அழகிய பூமியில் அவதரித்தார்.
குகதாசன், யோகேஸ்வரி, அன்னலிங்கம் போன்ற சகோதரர்களுடன் குறும்புகள் செய்து வளர்ந்த இவர், திரு.திருமதி முத்தையா அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகள் நாகலட்சுமி அவர்களை பெற்றோரும் உற்றாரும் விரும்பியபடி கரம்பற்றி சந்தோசமாக வாழ்ந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
இருவரின் வாழ்க்கையின் பயனாக ரம்ஜா, பாலகுமார் போன்ற அன்புப் பிள்ளைகளைப் பெற்று வளர்த்து கோவர்த்தனன் என்பவருக்கு திருமணம் முடித்து வைத்து கார்த்திகன் எனும் பேரப்பிள்ளையுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
மேலும் அன்பும் பண்பும் கொண்ட இவர் நகைச்சுவையாக பேசுவதில் வல்லவராகவும், இசைப் பாடல்கள் கேட்பதில் அலாதி விருப்பம் கொண்டவராகவும் விளங்கினார். அத்துடன் வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் அறிவும் நிறைந்தவராகவும் விளங்கினார்.
இவ்வாறு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளை, உற்றார், உறவினர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் உறவுகளைத் தவிக்கவிட்டு 29.10.2019 இல் 65 வயதில் நெதர்லாந்தில் இறைபதம் அடைந்தார்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

