நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தம்பையா பத்மநாதன்
ஓய்வுபெற்ற நிர்வாக அதிகாரி நீர்ப்பாசன திணைக்களம்- புத்தளம், இலங்கை, நூலகர்- TESOC, Scarborough Canada
வயது 838 மார்ச், 1936 – 19 செப்டம்பர், 2019
- பிறந்த இடம்
- கொக்குவில்
- வாழ்ந்த இடம்
- புத்தளம், கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஎங்கள் குடும்ப தலைவரின் மரணச்செய்தியை கேட்டு ஓடோடி வந்து உதவி ஒத்தாசைகள் புரிந்தவர்களுக்கும், உறவுகளின் வீடுகளுக்கு எடுத்துச் சென்ற இணையத்தளங்களுக்கும், துயரத்தை பகிர்ந்து கொண்ட உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும், தொலைபேசி மூலம் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், கண்ணீர் அஞ்சலிகளை வெளியிட்டவர்களுக்கும், மற்றும் இறுதிக்கிரியை நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
சமூக சேவையினை உயிர் மூச்சாக வாழ்ந்து பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவந்த அன்பு உள்ளமான பத்மநாதன் வரலாற்றின் நினைவுடன்......
சகலவளமும் நிறையப்பெற்ற இலங்கையின் வடபால் அமைந்துள்ள யாழ்ப்பாணம் கொக்குவிலில் புகழ் பூத்த சீமான் திரு.தம்பையா அவர்தம் பாரியார் சோதிமதி அவர்களின் அன்பு மகனாக 08/Mar/1936 ஆம் ஆண்டில் திரு.பத்மநாதன் அவர்கள் இவ் அழகிய பூமியில் அவதரித்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
அத்துடன் இளமையிலே தன்முயற்சியும் கடின உழைப்பும் தன்னம்பிக்கையும் மிகுந்த இவர் தந்தையுடனும் அன்னலட்சுமி, பாலசுப்ரமணியம், கமலாதேவி, சரோஜனிதேவி, கிருஷ்ணலீலா, ரஞ்ஜனா, தவஜோதி போன்ற உடன்பிறப்புகளுடன் சேர்ந்து சொந்தத் தொழில் செய்து உயர்நிலை அடைந்த இவர் திரு.திருமதி சிவசம்பு அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மகளான சரஸ்வதி அவர்களை பெற்றோரும் உற்றாரும் விரும்பியபடி கரம்பற்றி சந்தோசமாக வாழ்ந்ததன் பயனாக புவிராஜ், லதா, சுதா, பிருதிவிராஜ் எனும் அன்புப் பிள்ளையைப் பெற்று அன்பாக வளர்த்து சதானந்தன், அற்புதராஜா, ரஜனி, கவிதா போன்றவர்களை திருமணம் முடித்து வைத்து கிரி, லிஷாந்த், ஜிரோஷன், வினுஷன், லக்ஷனா, சஜன் போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
மேலும் புத்தளம் நீர்ப்பாசனத் திணைக்கள நிர்வாக அதிகாரியாக கடமையாற்றி ஓய்வு பெற்றதுடன் கனடாவில் நூலகர் - TESOC ஆகவும் விளங்கியதுடன் அன்பான பேச்சால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவரும் கடின உழைப்பாளியும். வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பெறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார். இவ்வாறு பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள், சகோதரங்கள், உற்றார், உறவினர் நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் உறவுகளைத் தவிக்கவிட்டு 19.09.2019 இல் 83 வயதில் கனடாவில் உள்ள Scarborough நகரத்தில் இறைபதம் அடைந்தார் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.
கண்ணாடி வதனமே
கலங்காத சிறந்த அதிகாரியே
விண்ணில் பரவும் ஒளியே
கண்ணில் படும் காட்சியே
அன்னலே எம் வள்ளலே
மண்ணில் நீங்கள் முத்து - எமது
மனங்களின் சொத்து
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

