ஆறுதல்

மரண அறிவித்தல்

தம்பு தாமோதரம்பிள்ளை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தம்பு தாமோதரம்பிள்ளை

ஓய்வுபெற்ற தலைமைக் களஞ்சியப் பொறுப்பாளர்- வடக்கு மடக்கொம்பர அரசபெருந்தோட்டம், வட்டக்கொடை ,நுவரெலியா

வயது 9026 ஜூன், 1929 – 27 ஜூலை, 2019

பிறந்த இடம்
இணுவில்
வாழ்ந்த இடம்
கொழும்பு, இணுவில், நுவரெலியா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், இணுவில், நுவரெலியா வட்டக்கொடை, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பு தாமோதரம்பிள்ளை அவர்கள் 27-07-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சகுந்தலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

புவிமதி, குகமதி, காலஞ்சென்ற கிருபாகரன், ஞானாகரன், உமாகரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கிருபாநந்தன், ஆனந்தவரதன், சுஜாதா, சாந்தலோஜினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

உலகநாயகி, நடராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இந்திரலீலாவதி, காலஞ்சென்ற லோகநாதன், சுந்தரலீலாவதி, காலஞ்சென்ற புஷ்பராஜலிங்கம், நித்தியாநந்தம், கமலேஷ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஹிந்துஷா(ரமணன்), நிரோஷன்(சத்யா), கஜாந்த், பிரியங்கன், அபிஷேகா, நிதுஷன், சயந்தன், திலக்‌ஷன், சாகித்தியன், அங்காளினி, சான்றோன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

ரிஷிகா, மலியா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 31-07-2019 புதன்கிழமை மற்றும் 01-08-2019 வியாழக்கிழமை ஆகிய தினங்களில் கொழும்பு கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் 01-08-2019 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் கொழும்பு கல்கிசை மயானத்தில் சைவ ஆகம முறைப்படி தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

சகலவளமும் நிறையப்பெற்ற இலங்கையின் வடபால் அமைந்துள்ள யாழ்.இணுவிலில் புகழ் பூத்த சீமான் திரு.தம்பு அவர்தம் பாரியார் இராசம்மா அவர்களின் அருமைப் புத்திரனாக 26/JUN/1929 ஆம் ஆண்டில் திரு.தாமோதரம்பிள்ளை அவர்கள் உலகநாயகி,நடராசா போன்ற உடன்பிறப்புகளுடன் இவ் அழகிய பூமியில் அவதரித்தார்.

அத்துடன் இளமையிலே தன்முயற்சியும் கடின உழைப்பும் தன்னம்பிக்கையும் மிகுந்த இவர் தன் தந்தையுடன் சேர்ந்து சொந்தத் தொழிலில் ஈடுபட்டதுடன் திரு.பொன்னுத்துரை நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மகள் சகுந்தலாதேவி அவர்களை பெற்றோரும் உற்றாரும் விரும்பியபடி கரம்பற்றி சந்தோசமாக வாழ்ந்ததன் பயனாக புவிமதி, குகமதி, கிருபாகரன், ஞானாகரன், உமாகரன் போன்ற அன்புப் பிள்ளைகளை பெற்று வளர்த்து கிருபாநந்தன், ஆனந்தவரதன், சுஜாதா, சாந்தலோஜினி போன்றவர்களுக்கு திருமணம் முடித்து வைத்து ஹிந்துஷா, நிரோஷன், கஜாந்த், பிரியங்கன், அபிஷேகா, நிதுஷன், சயந்தன், திலக்ஷன், சாகித்தியன், அங்காளினி, சாண்றோன் போன்ற பேரப்பிள்ளைகளுடனும் ரிஷிகா, மலியா போன்ற பூட்டப்பிள்ளைகளுடனும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் நுவரெலியா வட்டக்கொடை வடக்கு மடக்கொம்பர அரசபெருந்தோட்ட தலைமைக் களஞ்சியப் பொறுப்பாளராக சேவையாற்றி ஓய்வு பெற்ற இவர் அன்பான பேச்சால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவரும் கடின உழைப்பாளியும். கலகலப்பாக பேசுவதும்,தனக்கே உரித்தானபுன்சிரிப்பும் கொண்டதுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார்,இவ்வாறு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள் உற்றார், உறவினர் நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் உறவுகளைத் தவிக்கவிட்டு 27.07.2019 இல் 90 வயதில் கொழும்பில் இறைபதம் அடைந்தார் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.

சேவை விரும்பியே
......செந்தாமரை வதனமே
பாவை மனமே
.....பாச உயிரே
நாவை அடக்கி
...... நல் நெறி வாழ்ந்து
சாவைத் தழுவிய
......சந்தன மேனியே

பிற அறிவித்தல்கள்

  1. 24 ஆகஸ்ட், 2019நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.