31ம் நாள் நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
தம்பியப்பா பாலசிங்கம்
Retired Estate Medical assistant(E.M.A)-Dikoya
4 செப்டம்பர், 2010
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- தெஹிவளை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககந்தர்மடத்தை பிறப்பிடமாகவும், தெகிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பியப்பா பாலசிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
கண்ணுக்கு கண்ணாக வளர்த்தெடுத்து
கல்வியிலும் கேள்வியிலும் சிறக்கவைத்து
எண்ணுக்கும் எழுத்துக்கும் விளக்கம் தந்து
ஏழ்மை எமை அணுகாமல் பார்த்திருந்து
மண்ணுக்கும் மேலாகப் பொறுமைக்காத்து
மாசில்லா அன்புடனே மடியில் வைத்து
விண்ணுக்குள் மறைந்தாரே எங்கள் தந்தை
வேதனையில் நாமெல்லாம் துடித்து நின்றோம்!
செய்கின்ற தொழிலொன்றே தெய்வமென்று
சேவையிலே சிறப்பான பெயரெடுத்து
வைகின்ற பேருக்கும் வாழ்வளித்து
வாழ்வாங்கு வாழ்ந்திருந்த எங்கள் தந்தை
நைகின்ற நோயாளர் வாய்கள் வாழ்த்த
நாளோடும் பொழுதோடும் நன்றே ஆற்றி
பொய்யொன்றே எல்லோரும் நினைத்திருக்க
பூவுலகைத் துறந்தாரே புலம்பலானோம்!
வேண்டுமெங்கள் தெய்வமென கரைந்தாலும்
வேகமாய் ஓர் மாதம் நிறைந்தாலும்
மாண்டுவிட்ட எம்தந்தை நினைவுகளை
மறக்கவே முடியவில்லை இறைவா இனி
மீண்டுமொரு பிறப்பெடுத்து பிள்ளையாகி
மேன்மை பெற எம்மில்லில் பிறக்கவேண்டும்
தீண்டுமொரு நினைவாலே அவரின் ஆன்மா
தினந்தோறும் சாந்திகொள்ள துதித்திடுவோம்!
கடந்த 04.09.2010 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்த எங்கள் குடும்பத்தலைவர் அவர்களின் மரணச் செய்திகேட்டு நேரில்வந்து நிகழ்வில் கலந்துக்கொண்டவர்களுக்கும், தொலைபேசி மூலம் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
— உமாதர்ஷன் பாலசிங்கம்(மகன்)
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

