1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
தனலெட்சுமி சண்முகநாதன்
வயது 754 டிசம்பர், 1943 – 3 ஜூலை, 2019
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 9ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- திருகோணமலை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வதிவிடமாகவும் கொண்டிருந்த தனலெட்சுமி சண்முகநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
தலை நகரில் வீற்றிருந்த தாயே! உனைத் - திரு
மலை நகரில் ஆட்சி செய்யும் தாயழைத்தாளோ?
கலை அழகே! விலையிலாப் பெருஞ் செல்வமே!
அலை கடலில் படகைப் போல் தத்தளிக்கின்றோம்
உலைக் களத்தில் நெருப்பனெவே தினம் தகிக்கின்றோம்
நிலை இல்லா வாழ்வில் ஆண்டொன்றின் நினை
வலைகள் வந்து நெஞ்சக் கரையில் மோதுதம்மா!
பொய்யாயின வெல்லாம் போயகல எங்கள்
ஐயாவின் வழித்தடம் பற்றிச் சென்றிருப்பாய் நீயே!
மெய்யாகி உயிராகி மூச்சாகி எமை காத்து - இந்த
வையகத்தில் வாழ்வாங்கு வாழ்ந்த பெருந் தெய்வமே!
உய்ய வழி காட்டி ஒளிச்சுடர் தந்து ஓங்க வைத்தாயே!
பெய்யாதோ மாமழையும் பெய்திடுமே! அம்மா நீ சொன்னால்
ஐயோ! தாயே! ஆண்டொன்று ஆகியும் துயரமது ஆறலையே!
நாளும் பொழுதும் எமையாளும் அன்புத் தாயே!
வாழுங் காலம் யாவும் உன் நினைவோடு வாழ்வோமே!
கோளுங் கொடுங் கூற்றும் எமை அண்டாது காத்தவளே!
பாழுங் காலக் கடலில் தெப்பமென வந்து நிற்பாய்!
சூழும் வினைகள் எமைச் சூழாது காத்து நின்று
மீளும் வழி காட்டி மேன்மையுற ஏற்றி வைப்பாய்!
நாம் மாளும் காலம் வரை தப்பாது ஓடி வரும் உன் நினைவலைகள்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
நினைவகலா நினைவுகளுடன், மக்கள், மருமக்கள், பேரமக்கள்..
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணத்தின் நான்கு பக்கமும் கடல் அலை தாலாட்டும் அழகிய தீவும்,படித்து கல்வியறிவு கூடிய மக்களாக விளங்குவதும் கடலுணவுகள்,கால்நடை வளர்ப்பு என அழகு நிறைந்த புங்குடுதீவில்09ஆம் வட்டாரத்தில் 04/DEC/1943 இல் திரு திருமதி. கிருஷ்ணபிள்ளை நாகம்மா தம்பதிகளின் புத்திரியாக தனலெட்சுமி அவர்கள் தர்மராஜா, விஸ்வலிங்கம், இராஜலிங்கம் போன்ற உடன்பிறப்புகளுடன் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் பொன்னையா தங்கம்மா தம்பதிகளின் அறிவு நிறைந்த ஆண் மகனான சண்முகநாதன் என்பவரைத் திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்ததன் பயனாக காஞ்சனமாலா, வசந்தகுமார், ரஞ்சனமாலா, வசந்தமாலா, ரத்தினமாலா போன்ற பிள்ளைகளைப் பெற்று கண்ணின் மணி போல் பாதுகாத்து வளர்த்து புஸ்படக்ஷன், மேகலா, பாஸ்கரன், சதானந்தன், சாந்தகுமார் என்பவர்களைத் திருமணம் முடித்து வைத்து டனிஷா, பிரனாஸ், அஷ்வினா, டிஷாங்கி, டிலக்ஷி, மோணிஷா, இஷாலினி, அபினாஷ், ஷர்னிக்கா, கோபிசன் போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும்,சுயநலம் இல்லாது அன்பு காட்டுபவராக விளங்கியதுடன், அமைதியும் சாந்தமும் கருணையும் கொண்டு விளங்கிய இவர் குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்தார் இவ்வாறு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 03.07.2019 இல் 75 வயதில் திருகோணமலையில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
கண்ணாடி வதனமே
....... கலங்கா இதயமே
முன்னாடி சிரிப்புடன்
........முகத்திலே பொட்டுடன்
என் நாளும்
.......எம்முடன் அன்பாய்
பண்பாய் உருவாக்கி
........பாதியில் பிரிந்தீரே
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

