மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தனலக்சுமி ஸ்ரீகதிர்காம சம்பந்தர்
வயது 7019 மார்ச், 1949 – 28 ஆகஸ்ட், 2019
- பிறந்த இடம்
- அளவெட்டி
- வாழ்ந்த இடம்
- கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட தனலக்சுமி ஸ்ரீகதிர்காம சம்பந்தர் அவர்கள் 28-08-2019 புதன்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான குமாரசாமி பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
ஸ்ரீகதிர்காம சம்பந்தர்(ஓய்வு பெற்ற அதிபர்) அவர்களின் அருமை மனைவியும்,
திலீபன்(பிரித்தானியா), ரம்யா(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கோபிக்குமார்(பிரித்தானியா), லாவண்யா(பிரித்தானியா) ஆகியோரின் ஆசை மாமியாரும்,
பரஞ்சோதி, இராஜேஸ்வரி, கணேசமூர்த்தி, சுப்ரமணியம், மங்களேஸ்வரி, காலஞ்சென்றவர்களான கிருஸ்ணமூர்த்தி, சிவலிங்கம், கனகரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவானந்தம், பத்மராஜா, பத்மநாதன், இந்திராணி, ஸ்ரீகாந்த், காலஞ்சென்றவர்களான ஸ்ரீரஞ்சிதம், பத்மினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கவீன், பிரணீதா, சிரோன், விஜேன், துஷான் ஆகியோரின் அருமை பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் பி.ப 4:00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணத்தின் அழகு நிறைந்த இடமும் படித்தவர்களைக் கொண்டதும், தெங்கு தோட்டம், நெல்வயல், வெங்காய வயல்கள், மரக்கறித் தோட்டம், புகையிலைத் தோட்டம், பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த அளவெட்டியில் 19/MAR/1949 இல் திரு.திருமதி வேலுப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அருமை மகளாய் தனலக்சுமி அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் பரஞ்சோதி, இராஜேஸ்வரி, கணேசமூர்த்தி, சுப்ரமணியம், மங்களேஸ்வரி, கிருஸ்ணமூர்த்தி, சிவலிங்கம், கனகரட்ணம் போன்ற உடன்பிறப்புகளுடன் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் திரு.திருமதி குமாரசாமி பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகன் அதிபரான திரு.ஸ்ரீகதிர்காம சம்பந்தர் என்பவரைத் திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்ததன் பயனாக திலீபன், ரம்யா எனும் அன்புப் பிள்ளையைப் பெற்று பாதுகாத்து வளர்த்து லாவண்யா, கோபிக்குமார் போன்றவர்களை திருமணம் முடித்து வைத்து கவீன், பிரணீதா, சிரோன், விஜேன், துஷான் எனும் பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் சரசு என்று அன்பாக அழைக்கப்படும் இவர் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும், பழைய கதைகள் சொல்வதில் வல்லவராகவும், அன்பு பாசம் நிறைந்து கானப்படும் அழகிய உறவாக விளங்கியதுடன். அமைதியும் சாந்தமும் கருணையும் கொண்டு வாழ்ந்தார்.
இவ்வாறு கணவன், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள், என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 28.08.2019 இல் 70 வயதில் கொழும்பில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.
பௌர்ணமி நிலவே பாச உறவே
வர்ணக் கிளியே வாழ்வின் ஒளியே
கடவுள் உள்ளமே கருனை மனமே
நிஜமாக வாழ்ந்த எங்கள் அம்மா
நினைவை மீட்டி நிழலை தேடி
அலையும் மனமானமே ஆசை அன்னையே.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

