ஆறுதல்

31ம் நாள் நினைவஞ்சலி

தனலட்சுமி இராமச்சந்திரன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தனலட்சுமி இராமச்சந்திரன்

வயது 7022 மார்ச், 1946 – 14 செப்டம்பர், 2016

பிறந்த இடம்
வல்வெட்டித்துறை
வாழ்ந்த இடம்
London

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வல்வெட்டித்துறை கொத்தியாலைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த தனலட்சுமி இராமச்சந்திரன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

அன்னார், காலஞ்சென்றவர்களான துரைராசா சிவகாமசுந்தரி தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான திருமேனிப்பிள்ளை உத்தரேஸ்வரி அம்மாள் தம்பதிகளின் மருமகளும்,

காலஞ்சென்ற இராமச்சந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,

வளர்மதி சிறிதரன், காலஞ்சென்ற அன்புசிவம், இந்துமதி நந்தகுமார், ரஜனி சிவகுமாரன், இராமச்சந்திரன் அன்பழகன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

மதனசுந்தரம் சிறிதரன், வேலுப்பிள்ளை நந்தகுமார், மகேசதாசன் சிவகுமாரன், மதுமதி அன்பழகன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சந்தோஸ், சாருகாஸ், அபிராமி தர்மேந்திரன், நிவேதா, துவாரகா, கிஷோர், யாதவன், சனோஐன், சஞ்சீவன், ரித்திகா, ஆகாஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

எங்கள் குடும்பத்தின் குலவிளக்காய்
திகழ்ந்த எங்கள் அன்புத் தெய்வமே!

எங்கள் பாசத்தின் பிறப்பிடமே
அன்பையும் அரவணைப்பையும் தந்தவரே!

எங்களைத் தவிக்க விட்டு
அமைதியாய் சென்றீர்களே!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றோம்!

அன்னாரின் மறைவுச்செய்தி கேட்டு நேரில் வந்தும், தொலைபேசி, மின்னஞ்சல், குறுஞ்செய்தி, முகப்புத்தகம் மூலம் ஆறுதல் கூறியவர்களுக்கும், அவரது இறுதிச் சடங்கில் கலந்துகொண்டோர்க்கும் மற்றும் பல வழிகளில் உதவிகள் புரிந்த நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் நாம் எமது குடும்பம் சார்பாக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அவரது அந்தியேட்டிக்கிரியை 14-10-2016 வெள்ளிக்கிழமை அன்று அதிகாலை நடைபெற்று பின்னர் Saint Michael's Roman Catholic Church - Pollard's Hill, 9 Fern Ave, Pollards Hill, Mitcham CR4 1LS, United Kingdom எனும் முகவரியில் மு.ப 11:00 மணிமுதல் பி.ப 03:00 மணிவரை ஆத்மசாந்திப் பிரார்த்தனை நடைபெறும். இந் நிகழ்விலும் அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
No. 29 Lancing Road,
Croydon,
Surrey CR0 3EN,
London.

— குடும்பத்தினர்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.