மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தண்டபாணிதேசிகர் நாகேஸ்வரி
வயது 708 செப்டம்பர், 1949 – 25 டிசம்பர், 2019
- பிறந்த இடம்
- அளவெட்டி
- வாழ்ந்த இடம்
- மல்லாகம், பரந்தன், Epinay
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், மல்லாகம், பரந்தன், பிரான்ஸ் Epinay ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தண்டபாணிதேசிகர் நாகேஸ்வரி அவர்கள் 25-12-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நடராஜா, மீனாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தண்டபாணிதேசிகர்(முன்னாள் சாரதிப்பயிற்சி ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சக்திவேல் அவர்களின் அன்புச் சகோதரியும்,
ஸ்ரீமதி(பிரான்ஸ்), ஜெயமதி(இலங்கை), சுமதி(பிரான்ஸ்), இந்துமதி(ஜேர்மனி), மதிதரன்(பிரான்ஸ்), சுதாமதி(பிரான்ஸ்), மதிமுகன்(பிரான்ஸ்), மதிமாறன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
திருக்குமார்(பிரான்ஸ்), சிவசண்முகம்(இந்தியா), ஸ்ரீதரன்(பிரான்ஸ்), மகாதேவன்(ஜேர்மனி), வித்யா(பிரான்ஸ்), மோகன்ராஜ்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
றஜிதா, ஸ்ரீநாத், சுகனியா, செல்வமோகன், செந்தூரன், பிரவீன்குமார், நிறோசனா, நிஷாந், டனிசியா, டனுசன், டிசாந், ஷகிஷ்ணா, ஹரிஷ்னா, சஹானா, அபூர்வா, அப்சரா, நேத்ரா, அனுத்ரா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
நட்சத்திரா, சனா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை, உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
ஈழமணித் திருநாட்டில் வடக்கே அமைந்த தமிழர் பகுதியான யாழ்ப்பாணத்தில் கல்வியறிவு கூடிய சமுதாயமாக விளங்கும் அளவெட்டியில் 08/SEP/1949 இல் திரு.திருமதி ஆறுமுகம் பரமேஸ்வரி தம்பதிகளுக்கு அழகுக் குழந்தையாக நாகேஸ்வரி அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் சக்திவேல் எனும் சகோதரத்துடன் குறும்பு செய்து வளர்ந்து பெரியவராகியதும், திரு.திருமதி நடராஜா, மீனாம்பிகை தம்பதிகளின் மகனான சாரதிப்பயிற்சி ஆசிரியரான திரு.தண்டபாணிதேசிகர் எனும் அறிவு நிறைந்த ஆண் மகனைத் திருமணம் முடித்து இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வந்ததன் பயனாக ஸ்ரீமதி, ஜெயமதி, சுமதி, இந்துமதி, மதிதரன், சுதாமதி, மதிமுகன், மதிமாறன் எனும் பிள்ளைகளைப் பெற்று வளர்த்தனர்
முழுக் கதையையும் வாசிக்க
பிள்ளைகள் பெரியவர்களாகியதும் திருக்குமார், சிவசண்முகம், ஸ்ரீதரன், மகாதேவன், வித்யா, மோகன்ராஜ் என்பவரைத் திருமணம் முடித்து வைத்து றஜிதா, ஸ்ரீநாத், சுகனியா, செல்வமோகன், செந்தூரன், பிரவீன்குமார், நிறோசனா, நிஷாந், டனிசியா, டனுசன், டிசாந், ஷகிஷ்ணா, ஹரிஷ்னா, சஹானா, அபூர்வா, அப்சரா, நேத்ரா, அனுத்ரா எனும் பேரப்பிள்ளையுடனும், நட்சத்திரா, சனா ஆகிய பூட்டப்பிள்ளைகளுடனும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
மேலும் நாகேஸ் என அனைவராலும் அழைக்கப்படுவதுடன் எப்போதும் தெய்வ நம்பிக்கை கூடிய இவர் மகிழ்ச்சியாக காலத்தைக் கழித்ததுடன், வீட்டைச் சுத்தமாக வைத்திருப்பதும், சிரித்த முகத்துடன் இருப்பவராகவும்,சுயநலம் இல்லாது அன்பு காட்டுபவராக விளங்கினார்.
இவ்வாறு கணவர், பிள்ளைகள், சகோதரங்கள்,பூட்டப்பிள்ளைகள், என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 25.12.2019 இல் 69 வயதில் பிரான்ஸில் உள்ள Epinay நகரில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.
அளவெட்டி மண்ணின் அன்னை உறவே
வழமையான புன்னகையுடன் ஒலிக்கும் தாயே
கலக்கம் அற்ற எங்கள் கருணை ஒளியே
விளங்கினீரே ஒளிரும் நிலவு வதனமுடன்
கலங்குகிறோம் எமைவிட்டு எங்கே பிரிந்து சென்றீர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

