ஆறுதல்

மரண அறிவித்தல்

தங்கமலர் இராஜகஸ்தூரி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தங்கமலர் இராஜகஸ்தூரி

வயது 778 பிப்ரவரி, 1942 – 28 ஜூலை, 2019

பிறந்த இடம்
திருநெல்வேலி
வாழ்ந்த இடம்
London

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியை வதிவிடமாகவும், லண்டனை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி தங்கமலர் இராஜகஸ்தூரி அவர்கள் 28-07-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சோமசுந்தரம் தம்பதிகளின் அன்பு மகளும், திரு. திருமதி சுப்பையா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற இராஜகஸ்தூரி அவர்களின் அன்பு மனைவியும்,

சின்னத்துரை குகேந்திரன் அவர்களின் பிரியமுள்ள மாமியாரும்,

சித்திரா, சுபத்திரா, சுசித்திரா, யசோதரா, சிவபாலன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தங்கரத்தினம், தனலட்சுமி, சுந்தரலிங்கம், யோகாம்பிகை, காலஞ்சென்ற சோதிலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சந்திரகுமார், தனபாலசிங்கம், சுதர்சன், குமரன், நிர்மலா, உதயா ஆகியோரின் அருமை மாமியாரும்,

சிவசண்முகி, சுவாதிகா, கோபிசங்கர், திவாணி, சுபாங்கி, துளசிகா, சங்கவி, சாம்பவி, சயந்தவி, அபிஷயன், அக்‌ஷயன், அஸ்விகா ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

வாழ்க்கை வரலாறு

யாழ்ப்பாணத்தின் அருகில் உள்ள இடமும் மக்கள் செறிந்து வாழும் பகுதியும் யாழ். பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடமும்,மரக்கறி தோட்டம்,பயன்தருமரங்கள் என வளம் நிறைந்த இடமான திருநெல்வேலியில் 08/FEB/1942 இல் திரு.திருமதி. சோமசுந்தரம் தம்பதிகளின் அருமை மகளாய் தங்கமலர் அவர்கள் தங்கரத்தினம், தனலட்சுமி, சுந்தரலிங்கம், யோகாம்பிகை, சோதிலிங்கம் போன்ற சகோதரங்களுடன் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் திரு.திருமதி சுப்பையா தம்பதிகளின் அன்பு மகன் திரு.இராஜகஸ்தூரி என்பவரைத் திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்ததன் பயனாக சித்திரா, சுபத்திரா, சுசித்திரா, யசோதரா, சிவபாலன் போன்ற பிள்ளைகளைப் பெற்று கண்ணின் மணி போல் பாதுகாத்து வளர்த்து சிவசண்முகி, சுவாதிகா, கோபிசங்கர், திவாணி, சுபாங்கி, துளசிகா, சங்கவி, சாம்பவி, சயந்தவி, அபிஷயன், அக்ஷயம், அஸ்விகா போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் பபி அன்ரி என அன்பாக அழைக்கப்படும் இவர் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும், சுவையான உணவுகள் செய்வதும்,சிற்றூண்டி செய்வதிலும் கைதேர்ந்தவராக விளங்கிய இவர் அமைதியும் சாந்தமும் கருணையும் கொண்டு குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்தார். இவ்வாறு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் உற்றார், உறவினர்கள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 28.07.2019 இல் 77 வயதில் பிரித்தானியாவில் உள்ள London நகரில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

கண்ணாடி வதனம் ஒன்று
கதைபோசி வாழ்ந்தது
முன்னாடி வருவோரை முக
மலர்ந்து அழைத்தது
என்னாலும் எவருடனும் வன் சொல் பேசாது
பண்பாக வாழ்ந்த பாச உறவு
மண்ணாகப் போனதே
மலர் விழிகள் கண்ணீர் சிந்த

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.