ஆறுதல்

10ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்பு25 நவம்பர், 1942
இறப்பு7 ஏப்ரல், 2009
தங்கம்மா தர்மரத்தினம் அவர்களின் படம்

தங்கம்மா தர்மரத்தினம்

வயது 66

பிறந்த இடம்: புங்குடுதீவுவாழ்ந்த இடம்: வவுனியா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு மடத்துவெளி 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தங்கம்மா தர்மரத்தினம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

உதிரத்தைப் பாலாக்கி ஊட்டியவள்!
உதிரமெல்லாம் பாசத்தை ஏந்தியவள் எம் தாய்!
தொட்டிலில் இட்ட அன்னையை
பத்தாண்டு தாண்டியும் அழுகின்றோம்!

எல்லோர் மனதிலும்
என்றும் அணையாத சுடராய்
வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள் அம்மா!

ஆண்டுகள் பத்து அகன்றே நின்றாலும்
அழியாத நினைவலைகள்
எம் அகத்தில் நின்று ஆழத்திலே
வாட்டி வதைக்கின்றது அம்மா!

எம் வாழ்க்கையின் வேராய் வாழ்ந்தவள் நீ
வாழ்க்கையில் ஒப்பிடா வேறாய் விளங்குபவள் நீ
உடலுக்குள் உயிர்வளர்த்த கடவுள் நீ
பத்துத்திங்கள் எம் சுமைதூக்கிய சுமைதாங்கியும் நீயம்மா!

ஆயிரம் ஆண்டுகள் அடுத்தடுத்து வந்தாலும்
ஆழிசூழ் உலகில் அன்னை உன் நினைவு மங்கிடுமோ?
நீ தந்த பாசத்தை இவ்வுலகில் எமக்கினி யார் தருவார்?

உங்கள் ஆத்மா சாந்தியடைய அன்னையின் காலடியே
சொர்க்கம் என்ற உண்மையினை இதயத்தில் ஏற்றி
நாளும் இறைவனை வேண்டுகின்றோம்!
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.

— குடும்பத்தினர்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.