ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

தங்கம்மா சிவசுப்பிரமணியம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தங்கம்மா சிவசுப்பிரமணியம்

வயது 802 டிசம்பர், 1938 – 5 ஏப்ரல், 2019

பிறந்த இடம்
மட்டுவில் தெற்கு
வாழ்ந்த இடம்
நுணாவில் கிழக்கு, சாவகச்சேரி, ஜேர்மனி, New Malden

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சாவகச்சேரி மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், நுணாவில் கிழக்கு சாவகச்சேரி, ஜேர்மனி, லண்டன் New Malden ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த தங்கம்மா சிவசுப்பிரமணியம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

குடும்பத்தின் ஒளி விளக்கே!
அன்பின் பிறப்பிடமே
ஆண்டொன்று ஆன போதும்
ஆறவில்லை நம் துயரம்!

இன்புற்றே இவ்வுலகில்
இணையில்லா வாழ்வு வாழ்ந்து
உயிருக்கு உயிராய் இருந்து
எம்மைக்காத்த எம் அன்னையே!

காலங்கள் பல சென்றாலும்
கடைசி வரை உங்கள் நினைவு
எம் நெஞ்சை விட்டு அகலாது!

என்றும் உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..

— குடும்பத்தினர்

வாழ்க்கை வரலாறு

யாழ்ப்பாணத்தில் அழகிய தென்மராட்சியில் நெல்வயல்களும், மிளகாய் செடிகளும் வெங்காய வயல்களும், மரக்கறித் தோட்டங்களும் அழகிய அம்மன் ஆலயம் அமைந்துள்ள சாவகச்சேரியில் உள்ள மட்டுவிலில் 02-12-1938 இல் சின்னத்தம்பி இராசம்மா தம்பதிகளுக்கு அன்புப் புதல்வியாக தங்கம்மா அவதரித்தார்.

அன்பும் பண்பும் நிறைந்த இவர் நல்லதம்பி, இராஜரட்ணம், சின்னத்துரை போன்ற உடன் பிறப்புகளுடன் கூடி குறும்புகள் செய்து மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் நாகமுத்து செல்லாச்சி தம்பதிகளின் அருமை மகனான வவுனியா நீர்ப்பாசன திணைக்களத்தில் வேலை செய்த சிவசுப்பிரமணியம் என்பவரைத் திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ்ந்து ஈஸ்வரன், கௌரி ஜெகதீஸ்வரன், ஆதவன், பவான், மாதவன் போன்ற அருமைப் பிள்ளைகளை பெற்று வளர்த்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

விமலாதேவி எனவும் அன்பாக அழைக்கும் இவர் பெறுமைசாலியாக வாழ்ந்து குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவி செய்வதை தனது வாழ்வில் அங்கமாக கொண்டவர்.

இவ்வாறு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 05-04-2019 இல் 80 வயதில் பிரித்தானியாவில் உள்ள New Malden நகரில் இயற்கை மரணம் அடைந்தார்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

"அன்பு அம்மா......
அழகிய உருவே
இன்னல் தாங்கும்......
இடி தாங்கியே
கண்ணிண் மணியாய்....
பார்த்து வளர்த்து
கடைசியில் எம்மை......
விட்டுச் சென்றீரே""

பிற அறிவித்தல்கள்

  1. 7 ஏப்ரல், 2019மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.