நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தங்கம்மா சுப்பிரமணியம்
25 செப்டம்பர், 2019
- பிறந்த இடம்
- நெடுந்தீவு
- வாழ்ந்த இடம்
- அரியாலை, கொழும்பு, Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஅன்னாரின் மரணச்செய்தி கேட்டு, இல்லம் நாடி ஓடோடி வந்து கண்ணீர் சிந்தியவாறு எமக்கு ஒத்தாசைகள் புரிந்தவர்களுக்கும் ஆறுதலும், தேறுதலும் கூறிய அன்புள்ளங்கள் அனைவருக்கும், தொலைபேசி, அனுதாப அட்டைகள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக அனுதாபம் தெரிவித்த உள்நாட்டு, வெளிநாட்டு உறவினர் நண்பர்கள் அனைவருக்கும், கண்ணீர் அஞ்சலி பிரசுரித்த அன்பர்களுக்கும், மலர்வளையம் வைத்து அஞ்சலி செய்தோருக்கும், மற்றும் இறுதிநிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
பிள்ளைகள் வாழ்வின் உயர்வும் இன்பமும் என மூச்சாக வாழ்ந்த அன்புத் தாய் தங்கம்மா அவரின் வாழ்க்கைப் பக்கங்களில் சில தொடர்கிறன....
யாழ்ப்பாணத்தின் நான்கு பக்கமும் கடல் அலை தாலாட்டும் அழகிய தீவும்,படித்து கல்வியறிவு கூடிய மக்களாக விளங்குவதும் கடலுணவுகள்,கால்நடை வளர்ப்பு என அழகு நிறைந்த நெடுந்தீவில் திரு.திருமதி நாகமணி குட்டியம்மா தம்பதிகளின் அன்பு மகளான தங்கம்மா அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் கதிரவேலு, நாகேந்திரன், பொன்னம்பலம், முத்துகுமாரு போன்ற உடன்பிறப்புகளுடன் கூடி ஒன்றுபட்டு வளர்ந்து பெரியவளானதும் திரு.திருமதி சின்னத்தம்பி வள்ளியம்மை தம்பதிகளின் அழகிய ஆண் அழகனான சுப்பிரமணியம் அவர்களைத் திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்தனர். இருவரின் இனிமையான வாழ்வின் சொத்தாக திலகராணி, தயாபரன், கலாநிதி மகேஸ்வரன் எனும் பிள்ளைகளைப் பெற்று வளர்த்து புஷ்பலதா, மாதுமையாள் என்பவர்களை திருமணம் முடித்து வைத்து, அழகும் அறிவும் நிறைந்த அர்வின், அஷ்மிதா, டிலன், கவின், மொழி, ஷாரினி போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
மேலும் லக்ஷ்மி என அன்பு நாமத்தையும் கொண்ட இவர் அரியாலையிலும் அதன்பின் கொழும்பிலும் வாழ்ந்ததுடன் அன்பான பேச்சால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவரும் கடின உழைப்பாளியும். கலகலப்பாக பேசுவதும்,தனக்கே உரித்தானபுன்சிரிப்பும் கொண்டதுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார், இவ்வாறு கணவன், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 25.09.2019 இல் கனடாவில் உள்ள Toronto நகரில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.
அன்னை முகமே அன்பின் ஒளியே
நித்தம் எமை நினைக்கும் உண்மை உறவே
தந்தாய் அன்பை தயவு மனமுடம்
வென்றோம் உலகை வீரப் பாலால்
எங்கே போனீர் எங்கள் தாயே.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

