மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தங்கராசா தவமணி
வயது 5928 ஏப்ரல், 1960 – 5 ஆகஸ்ட், 2019
- பிறந்த இடம்
- மருதங்கேணி
- வாழ்ந்த இடம்
- மருதங்கேணி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மருதங்கேணியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட தங்கராசா தவமணி அவர்கள் 05-08-2019 திங்கட்கிழமை அன்று இறைபதம் சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முருகேசு, அன்னம்மா தம்பதிகளின் மூத்த புதல்வியும், காலஞ்சென்ற சின்னையா(ராமு), இராசமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தங்கராசா(லண்டன்) அவர்களின் அன்பு மனைவியும்,
லோகா(லண்டன்), சைலா(இலங்கை), குமார்(லண்டன்), நிசா(பிரான்ஸ்), றதீஸ்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தவராசா, தவயோகராணி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
நிர்மலாதேவி, செளந்தரராசா, காலஞ்சென்றவர்களான செல்வம், தங்கம், சின்னராசா மற்றும் பொன்னம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
றொபின்சன்(லண்டன்), மோகன்(இலங்கை), சர்மிளா(லண்டன்), பரமேஸ்வரன்(பிரான்ஸ்), நிறோஜா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
துதி(இலங்கை), றஞ்சனா(இலங்கை), துசியந்தன்(லண்டன்), துவாகரன்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பெரிய தாயாரும்,
டயானி(லண்டன்), நிலோஜன்(இலங்கை), டயன்சன்(லண்டன்), பிரவீணா(இலங்கை), பிரணவி(இலங்கை), லினுஷா(இலங்கை), பரத்(பிரான்ஸ்), சரத்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 25/16E 1ம் ஒமுங்கை, குட்செட் வீதி, வவுனியாவில் அமைந்துள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் இறுதிக்கிரியை மருதங்கேணியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெறும். திகதி பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
வடக்கே வங்கக்கடலும் தெற்கே கடல்நீரேரிக்கும் ஈடைப்பட்ட நீண்டு ஒடுங்கிய பரப்பைக்கொண்ட வடமராட்ச்சிக் கிழக்கில் நீண்டு வளர்ந்த பனை மரங்கள் அழகிய வயல்நிலங்கள்,ஆல்,அரசு,வேம்பு என்பவற்றுடன் கோவில்கள் நிறைந்து கானப்படும் மருதங்கேணி தெற்கில் 28/APR/1960 இல் திரு.திருமதி முருகேசு அன்னம்மா தம்பதிகளின் அருமை மகளாய் தவமணி அவர்கள் தவராசா, தவயோகராணி போன்றவர்களின் மூத்த சகோதரியாக இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் திரு.திருமதி சின்னையா இராசமணி தம்பதிகளின் அன்பு மகனான திரு. தங்கராசா என்பவரைத் திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்ததன் பயனாக லோகா, சைலா, குமார், நிசா, றதீஸ் போன்ற அன்புப் பிள்ளைகளைப் பெற்று கண்ணின் மணி போல் பாதுகாத்து வளர்த்து றொபின்சன், மோகன், சர்மிளா, பரமேஸ்வரன், நிறோஜா போன்றவர்களை திருமணம் முடித்து வைத்து டயானி, நிலோஜன், டயன்சன், பிரவீணா, பிரணவி, வினுஷா, பரத், சரத் போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும்,சுவையான உணவுகள் செய்வதும்,சிற்றூண்டி செய்வதில் கைதேர்ந்தராக விளங்கியதுடன்,அனைவருக்கும் உதவி செய்வதில் அலாதி விரும் உடைய இவர் அமைதியும் சாந்தமும் கருணையும் கொண்டு விளங்கினார். இவ்வாறு கணவன், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்,உற்றார்,உறவினர்கள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர்05.08.2019 இல் 59 வயதில் மருதங்கேணியில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்
மருதமண் தந்த
முத்தே
அருமைக் குணம் கொண்ட
சொத்தே
கருமை நிறங் கொண்ட
வித்தே
நெருங்கி இருந்து வந்த
உயிரே
கலங்கி அழ வைத்த
அன்பே
காலமதில் நிலைத்தாய்
அம்மையே
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

