மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தங்கராசா டொலாறோஸ்
இளைப்பாறிய ஆசிரியை
வயது 7122 பிப்ரவரி, 1948 – 1 ஜூலை, 2019
- பிறந்த இடம்
- முருங்கன்
- வாழ்ந்த இடம்
- முருங்கன்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமன்னார் முருங்கன் மாவிலங்கேணியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட தங்கராசா டொலாறோஸ் அவர்கள் 01-07-2019 திங்கட்கிழமை அன்று மன்னாரில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சவரிமுத்து(இளைப்பாறிய அதிபர்), சவிரியாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், அவுறாம்பிள்ளை மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற அவுறாம்பிள்ளை சேவியர் தங்கராசா அவர்களின் அன்பு மனைவியும்,
அமலறாஜா(பிரான்ஸ்), நிமலறாஜா(பிரான்ஸ்), விஜயா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கெலன் அவர்களின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற பொன்றோஸ் சந்தாம்பிள்ளை(இளைப்பாறிய அதிபர்), அல்பிரட் சறோஜினி(இளைப்பாறிய ஆசிரியை), காலஞ்சென்ற லில்லி அற்புதசிங்கம், சேவியர் பொன்றாஜா(பிரான்ஸ்), ஜெயறோஸ், அருள்றோஸ், நவறோஸ், சேவியர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜோனாஸ்(Jonash), ஜோநாதன்(Jonathan) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 05-07-2019 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் மன்னார் மாதா கோவிலில் இரங்கல் திருப்பலிக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் கத்தோலிக்க சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
இலங்கையில் மிக முக்கிய இடமான இது பண்டைய காலம் தொட்டு சிறப்பு வாய்ந்ததாகவும் சைவமும் கிறித்தவமும் உயர் நிலை பெற்றதுடன் நெல்வயல்கள்,மரக்கறித் தோட்டம்,பயன்தருமரம் என அழகிய மன்னார் முருங்கன் மாவிலங்கேணியில் 22/FEB/1948 இல் திரு திருமதி. சவரிமுத்து(அதிபர்) சவிரியாச்சி தம்பதிகளின் புத்திரியாக டொலாறோஸ் அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் பொன்றோஸ் சந்தாம்பிள்ளை, அல்பிரட் சறோஜினி, லில்லி அற்புதசிங்கம், சேவியர் பொன்ராஜா, ஜெயறோஸ், அருள்றோஸ், நவறோஸ் போன்ற உடன்பிறப்புகளுடன் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் திரு. திருமதி அவுறாம்பிள்ளை மாணிக்கம் தம்பதிகளின் அறிவு நிறைந்த ஆண் மகனான சேவியர் அவுறாம்பிள்ளை தங்கராசா என்பவரைத் திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்ததன் பயனாக அமலறாஜா, நிமலறாஜா போன்ற பிள்ளைகளைப் பெற்று கண்ணின் மணி போல் பாதுகாத்து வளர்த்து கெலன் என்பவரைத் திருமணம் முடித்து வைத்து ஜோனாஸ், ஜோநாதன் போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் றோசா என பெரிதும் அழைக்கப்பட்ட இவர் ஆசிரியையாக கடமை ஆற்றி ஓய்வு பெற்றதுடன் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும்,சுயநலம் இல்லாது அன்பு காட்டுபவராக விளங்கினார். மேலும் அமைதியும் சாந்தமும் கருணையும் கொண்டு விளங்கிய இவர் குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்தார். இவ்வாறு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 01.07.2019 இல் 71 வயதில் முருங்கனில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
கடமையை கண்ணென
....... ஏற்று
மடமையை மாணவரில்
........நீக்கி
அடக்கத்தை அன்புடன்
.......புகட்டி
சடலமாய் வீழ்ந்து
........சரித்திரமானீரே
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

