ஆறுதல்

மரண அறிவித்தல்

தங்கராஜன் சுககன்னியா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தங்கராஜன் சுககன்னியா

வயது 706 ஏப்ரல், 1950 – 6 ஏப்ரல், 2020

பிறந்த இடம்
பருத்தித்துறை
வாழ்ந்த இடம்
மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், திருகோணமலை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். பருத்தித்துறை கடற்கரை வீதியைப் பிறப்பிடமாகவும், மட்டகளப்பு, திருகோணமலை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தங்கராஜன் சுககன்னியா அவர்கள் 06-04-2020 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தணிகாசலம் தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னையா கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தங்கராஜன்(Executive Engineer Building Department) அவர்களின் அன்பு மனைவியும்,

அனுகரன்(ஜேர்மனி), சுபாகரன்(அவுஸ்திரேலியா), கிருபா(இலங்கை), கருணா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

Giau(ஜேர்மனி), சுதாஜினி(அவுஸ்திரேலியா), சிவபாலன்(இலங்கை), யுதா(குவைத்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கிருஸ்ணமூர்த்தி(கனடா), ராஜமூர்த்தி(கனடா), இளவரசி(கனடா), செல்வமூர்த்தி(கனடா), கணேசமூர்த்தி(கனடா), இரசநாயகி(கனடா), தனநாயகி(கனடா), சாந்தமூர்த்தி(கனடா), சிவமூர்த்தி(கனடா), சத்தியரூபன்(கனடா), சத்தியபாவனி(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

மாலா(இலங்கை), சித்திர(கனடா), வதனா(இலங்கை), செல்வி(அவுஸ்திரேலியா), ராஜி(கனடா), அபிராமி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

லலிதாமணி(கனடா), சிகாமணி(கனடா), காலஞ்சென்ற இந்திரலிங்கம், கமலாதேவி(கனடா), பகீரதி(கனடா), சந்திரலிங்கம்(கனடா), சூரியகுமார்(கனடா), குணவதி(கனடா), செந்தில் செல்வி(கனடா), ரஞ்சி(கனடா), ஈஸ்வரதாஸ்(கனடா), நாகேஸ்வரி(பவளம்- இலங்கை), சுந்தரேஸ்வரன்(கனடா), மகேஸ்வரன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

Tujan, Tusana(ஜேர்மனி), Pawin, Sajin(அவுஸ்திரேலியா), Kerushen, Sharujan, Rukshan(இலங்கை), அனுப்பிரியா, அனுராகவன்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 06-04-2020 திங்கட்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அரியாலை சித்துபத்தி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

"மூத்தவளாய் பிறந்தாய் எங்கள்
முகவரியாய் நின்றாய்
தந்தை தாயை இழந்தபோது எமை
தாங்கி நின்றவள் நீ- இன்று
தன்னந்தனியாக தனிப்பயணம் -போகின்றாய்
தவிக்கின்றோம் துடிக்கின்றோம் அக்கா

அக்கா என்று அருகில்வந்து- நின்று
அழுதிட முடியாமல் அடங்கிக்கிடக்கின்றோம்
அந்நிய தேசமதில் ஆற்றுவார் யார் அக்கா
ஆயுள் உள்ள மட்டும் மறக்க முடியுமா
உன் நினைவோடு ஆண்டவனை
வேண்டிநிற்கின்றோம் அக்கா
உன் ஆத்ம சாந்திக்காய்"

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.