மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தங்கராணி நவரத்தினசாமி
வயது 7125 ஜூலை, 1944 – 4 ஜூன், 2016
- பிறந்த இடம்
- வல்வெட்டித்துறை
- வாழ்ந்த இடம்
- பருத்தித்துறை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை திக்கத்தை வதிவிடமாகவும் கொண்ட தங்கராணி நவரத்தினசாமி அவர்கள் 04-06-2016 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, விசாலாட்சி தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்ற செல்லையா, கண்டு தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நவரத்தினசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
தவமணிதேவி(உதயம்- இலங்கை), திருச்செல்வம்(லண்டன்), மகேந்திரராணி(அல்லி- இந்தியா), விசியராணி(இந்தியா), இன்பராணி(லண்டன்), மனோகரன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
குணபாலசிங்கம்(சாமி- லண்டன்), செல்வராணி(இந்தியா), புஸ்பராணி(இந்தியா), மதுபாலசிங்கம்(இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற ரவீந்திரராசா(ரவி), வேதநாயகி(லதா), அருந்தவராசா, கண்ணன், ரமேஷ், இந்திரகுமாரி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
கட்டி(இந்தியா), சகுந்தலா(இலங்கை), சுதா(சுவிஸ்), விமலா(இலங்கை), துரை(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சாந்தா, காலஞ்சென்ற ராசு, கரண், ரூபன், பகி, லதீவன், மீனகா, தூயவன், கோபு, அனு, விதுஷா, ஜனா, தமிழ்ச்செல்வன், வசந்தன், இமேனா, இனிஷா, இனிதா, விசாலி, இனியவன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
சுபத்திரன், சுஷ்மிதா, சதுர்சிகா, சாகித்தியன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-06-2016 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் வல்வெட்டித்துறை ஊறணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

