ஆறுதல்

நன்றி நவிலல்

தங்கராசா கிட்டிணசாமி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தங்கராசா கிட்டிணசாமி

வயது 745 அக்டோபர், 1945 – 18 அக்டோபர், 2019

பிறந்த இடம்
வடமராட்சி
வாழ்ந்த இடம்
பொலிகண்டி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

எம்மை ஆறாத் துயரில் ஆழ்த்தி மீளாத் துயில் கொண்ட தங்கராசா கிட்டிணசாமி அவர்களின் பிரிவுச் செய்தி கேட்டு, நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசி, மின்னஞ்சல், சமூக வலைத்தளங்கள் ஆகியவை மூலமாக எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், சகல நிகழ்வுகளிலும் எம்முடன் கைகோர்த்து இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த உற்றார், உறவினர், நண்பர்களுக்கு எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

— குடும்பத்தினர்

வாழ்க்கை வரலாறு

இலங்கையின் அழகு நிறைந்த இடமும்,நன்கு படித்த மக்களைக் கொண்டதும்,அறிவு நிறைந்த இளைஞர்களைக் கொண்டதும்,வீரமும் எழுச்சியும் நிறைந்த மக்களாக விளங்குவதுடன், புகையிலைத் தோட்டம்,வெங்காய வயல்கள் மரக்கறித் தோட்டம்,பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த வடமராட்சி பொலிகண்டியில் 05/OCT/1945 ஆம் ஆண்டில் திரு.திருமதி தங்கராசா பொன்னம்மா தம்பதிகளுக்கு மூத்த மகனாக திரு. கிட்டிணசாமி அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார். அத்துடன் அன்பும் அழகு நிறைந்த இவர் கந்தவனம், செல்லக்கண்டு, திரவியம், தங்கவேலாயுதம், வள்ளிநாயகி, வேலும்மயிலும், சுப்பிரமணியம் எனும் உடன்பிறப்புடன் வளர்ந்து பண்பும் நல்லுள்ளமும் கொண்டவராக விளங்கியதுடன், திரு.திருமதி பொன்னையா வள்ளியம்மா தம்பதிகளின் அன்பு மகளான தவராஜேஸ்வரி என்பவரைத் திருமணம் முடித்து இன்பமாக வாழ்ந்து வந்தனர்.

இருவரும் சந்தோஷமாக வாழ்ந்ததன் பயனாக சசிகரன், ஸ்ரீகோணேஸ்வரன், பிருந்தா, கவிதா, காண்டீபன், அனிதா, ஆனந்த் எனும் அன்புப் பிள்ளையைப் பெற்று வளர்த்து தஷனி, விஜயகுமார், செல்வக்குமார், சரவணபவான் போன்றோரை திருமணம் முடித்து வைத்து கஜராஜ், சரவணண், கிஷானி, வித்யா, பிரித்யா, விஷ்ணு, அனோயன், அபிநயன் போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் கடின உழைப்பாளியும், தினசரி நாளிதழ்களைப் படிப்பதையும் தனது அன்றாட பொழுதுபோக்காக கொண்டிருந்த இவர், அதிக பக்தி கொண்டவரும் மேலும் உறவுகளிடம் பாசத்தை பொழிந்து, வாழ்வில் நேர்மையை கடைபிடித்த இவர் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணமும் கொண்டு விளங்கினார். இவ்வாறு மனைவி,பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள்,உற்றார் உறவினர், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 18.10.2019 இல் 74 வயதில் வடமராட்சியில் உள்ள பொலிகண்டியில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.

பொலிகை மண்ணின் உறவே
வலிமை கொண்ட உள்ளமே
எளிமை மனதுடன் உழைத்து
கலியுகத்தில் நல்லதை ஊட்டி
புன்னகை ததும்ப வாழ்ந்து
புகழ் அனைத்தையும் பெற்று
பூவுலகை விட்டுப் பிரிந்தீரே

பிற அறிவித்தல்கள்

  1. 18 அக்டோபர், 2019மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.