நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வேலுப்பிள்ளை தங்கராசா
வயது 748 நவம்பர், 1944 – 16 செப்டம்பர், 2019
- பிறந்த இடம்
- வல்வெட்டித்துறை நாவலடி
- வாழ்ந்த இடம்
- திருகோணமலை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஎங்கள் குடும்ப தலைவரின் மரணச்செய்தியை கேட்டு ஓடோடி வந்து உதவி ஒத்தாசைகள் புரிந்தவர்களுக்கும், உறவுகளின் வீடுகளுக்கு எடுத்துச் சென்ற இணையத்தளங்களுக்கும், துயரத்தை பகிர்ந்து கொண்ட உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும், தொலைபேசி மூலம் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், கண்ணீர் அஞ்சலிகளை வெளியிட்டவர்களுக்கும், மற்றும் இறுதிக்கிரியை நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
இலங்கையின் அழகு நிறைந்த இடமும், நன்கு படித்த மக்களைக் கொண்டதும், வீரமும் எழுச்சியும் நிறைந்த மக்களாக விளங்குவதுடன், எதற்கும் பயப்படாத மக்களும், கப்பல் கட்டி வானிபம் செய்த இடமும், கடலுணவு, பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த வல்வெட்டித்துறையில் 08/NOV/1944 இல் வேலுப்பிள்ளை நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனாக தங்கராசா அவர்கள் இவ் அழகு நிறைந்த இடத்தில் மழலையாக அவதரித்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் குறும்புகள் செய்து மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவனானதும், திரு.திருமதி பவளசிங்கம் பாக்கியம் தம்பதிகளின் அருமை மகள் தவமலர் எனும் அழகிய தேவதையுடன் திருமண பந்தத்தில் இணைந்து சந்தோசமாக வாழ்ந்து சத்தியபாமா, பிரபாகரன், சசிகரன், சசிகலா எனும் அழகிய பிள்ளையைப் பெற்று வளர்த்து புவனேஸ்வரன், ரூபராணி, சுமதி, வரதநாதன் என்பவர்களை திருமணம் முடித்து வைத்து கௌதாரன், கௌசியா, கௌசிகன், அபிராமி, லக்சனா, றகனியன், கரிஸ், கிரித்திகா, கிசோர், கிதுசன் எனும் பேரப்பிள்ளையுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் அன்பான பேச்சால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவரும் கடின உழைப்பாளியும். கலகலப்பாக பேசுவதும், தனக்கே உரித்தானபுன்சிரிப்பும் கொண்டதுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பெறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார்.
இவ்வாறு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 16.09.2019 இல் 74 வயதில் திருகோணமலையில் இறையடி எய்தினார்.
”வல்வை உறவே
.............வைகுந்த அழகே
மீசை அழகே
............மீட்டிய வீணையே
ஆசை மனதுடன் அன்பு
...........மழை பொழிந்து
சாயை அழகாக..........
சரித்திரம் படைத்தீரே”
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

