ஆறுதல்

மரண அறிவித்தல்

தங்கவடிவேல் உதயகுமார் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தங்கவடிவேல் உதயகுமார்

இலங்கை மின்சாரசபை ஊழியர்

வயது 5925 ஜூன், 1960 – 29 ஜூன், 2019

பிறந்த இடம்
உடுப்பிட்டி
வாழ்ந்த இடம்
உடுப்பிட்டி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். உடுப்பிட்டி கும்பவாளியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட தங்கவடிவேல் உதயகுமார் அவர்கள் 29-06-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தங்கவடிவேல், இராஜலக்சுமி தம்பதிகளின் அன்புப் புத்திரரும், காலஞ்சென்றவர்களான பீதாம்பரம், நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ரஞ்சினி(சோதி) அவர்களின் அன்புக் கணவரும்,

உமாசங்கர், கவிதா, கஜித்தா(சங்கீதா- சுவிஸ்), உமாகௌரி, ரதன்(அவுஸ்திரேலியா), சங்கீத் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பிபிஜன்(கனடா) அவர்களின் ஆசை மாமனாரும்,

உதயகுமாரி, குபேந்திரா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற வதனராஜா, தியாகராஜா(கனடா), காலஞ்சென்ற ரஞ்சன், ராஜன், ரூபன்(அவுஸ்திரேலியா), சாந்தன்(சுவிஸ்), ரோகினி, காலஞ்சென்றவர்களான சாந்தினி, ஜெயந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

றம்மியா, சுபாஸ்கரன்(அவுஸ்திரேலியா), திலக்ராஜ்(சுவிஸ்), நவதாஸ்(கனடா), ஜனனி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான தணிகாசலம், சிவலிங்கம் மற்றும் வள்ளியம்மா, புவனேஸ்வரி, சிவபாக்கியம், தங்கமணி, தவமலர், சந்திரவதி ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

யர்விஸ், சன்றியா, தனேஸ், டானிகா, அர்விஸ், தியாகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01-07-2019 திங்கட்கிழமை அன்று பி.ப 4:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் எள்ளங்குளம் இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யபடும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

சகலவளமும் நிறையப்பெற்ற இலங்கையின் வடபால் அமைந்ததுள்ள யாழ்ப்பாணத்தின் உடுப்பிட்டியில் புகழ் பூத்த சீமான் திரு.தங்கவடிவேல் அவர்தம் பாரியார் திருமதி இராஜலக்சுமி அவர்களின் அருமைப் புத்திரனாக 25/Jun/1960 ஆம் ஆண்டில் திரு.உதயகுமார் அவர்கள் உதயகுமாரி, குபேந்திரா எனும் அன்பு உடன்பிறப்புடன் இவ் அழகிய பூமியில் அவதரித்தார்.

அத்துடன் இளமையிலே தன்முயற்சியும் கடின உழைப்பும் தன்னம்பிக்கையும் மிகுந்த இவர் தன் தந்தையுடன் சேர்ந்து சொந்தத் தொழிலில் ஈடுபட்டதுடன், திரு.திருமதி பீதாம்பரம் நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மகள் ரஞ்சினி அவர்களை பெற்றோரும் உற்றாரும் விரும்பியபடி கரம்பற்றி சந்தோசமாக வாழ்ந்ததன் பயனாக உமாசங்கர், கவிதா, கஜித்தா, உமாகௌரி, ரதன், சங்கீத் போன்ற அழகுப் பிள்ளைகளைப் பெற்று வளர்த்து பிள்ளைகளின் விருப்பப்படி திருமணம் முடித்து வைத்து யர்விஸ், சன்றியா, தனேஸ், டானிகா, அர்விஸ், தியாகா போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் இலங்கை மின்சாரசபை ஊழியராக கடமையாற்றிய இவர் வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியாகவும் அறிவு நிறைந்தவராகவும் விளங்கினார், குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன் வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கியதுடன் சகோதரபாசம் கொண்டும் விளங்கினார். இவ்வாறு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் உறவுகளைத் தவிக்கவிட்டு 29.06.2019 இல் 59 வயதில் உடுப்பிட்டியில் இறைபதம் அடைந்தார் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.

"நேர்மை மனதில்
......நெற்றியில் சந்தணம்
பார்வை ஒன்றே
......பாசமாய் பார்க்கும்
கார் முகில் போல்
..... நன்மை செய்த
அன்பு உள்ளமே
.....அகிலம் துறந்தீரே"

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.