ஆறுதல்

6ம் ஆண்டு நினைவஞ்சலி

மலர்வு16 ஆகஸ்ட், 1986
உதிர்வு13 நவம்பர், 2013
தனுஜா யோகராஜா அவர்களின் படம்

தனுஜா யோகராஜா

வயது 27

பிறந்த இடம்
தொண்டைமானாறு
வாழ்ந்த இடம்
யாழ்ப்பாணம், கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். தொண்டைமானாற்றைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த தனுஜா யோகராஜா அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.

நீயே எமையாள் இளவரசி!

அந்தோ அன்னக் கிளிபோன்ற
அழகிய மகளே தனுஜாவே
உந்தன் பிரிவால் இன்றும்நாம்
ஒவ்வொரு கணமும் துடிக்கின்றோம்!

வானச் சந்திரன் சட்டென்றே
மண்ணில் விழுந்து மறைந்ததுபோல்
கான மயிலே கண்மணியே
கானல் நீராய்ப் போயினையோ?

தங்க மகளே சந்தனமே
தாமரை மலரே வழக்கம்போல்
வங்கி வேலைக்குச் செல்கையிலே
வாகன இயமனைக் கண்டனையோ?

இருபத் தாறு வயதினிலே
எங்கள் வாழ்வை இருளாக்கி
அருமை மகளே தனுஜாவே அரனடி சென்றது தகுமாமோ?

வன்னக் குயிலே வளர்மதியே
வாழ்வுக் கனவுகள் கலையமுன்னர்
கன்னி மகளே சென்றனையோ காலச் சதியோ வினைவிதியோ?

ஆண்டு ஆறு இன்றுடன் ஆயிடினும்
அகலா(து) உன்னினைவு ஆள்கிறது
தூண்டா விளக்கைச் சூழ்ந்துன்னை
தூமகளே நாம் துதிக்கின்றோம்!

தகவே சிவபுரத் தரசன்தாள்
சார்ந்தே வாழ்வாய் தவமகளே
நிகரில் எமையாள் இளவரசி
நீயே என்றும் வாழியவே!

சித்தம் கலங்கி, நித்தம் தவிக்கும் எங்களுக்கு
ஆறுதலைத் தந்திடுவாய் இறைவா!
உன் ஆத்மா சாந்தியடைய பரமாத்மாவை வேண்டுகின்றோம்.

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

உன் பிரிவால் வாடித்துடிக்கும் குடும்பத்தினர்!

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. ஆண்டு நினைவஞ்சலி · 13 நவம்பர், 20196ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →
  2. ஆண்டு நினைவஞ்சலி · 13 நவம்பர், 20207ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.