31ம் நாள் நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
தபோதினி கௌறிராம்
வயது 4627 செப்டம்பர், 1971 – 28 ஆகஸ்ட், 2018
- பிறந்த இடம்
- சாவகச்சேரி
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சாவகச்சேரி நுணாவில் சந்தி கண்டி வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தபோதினி கெளறிராம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியட்டி, வீட்டிக்கிருத்திய அழைப்பும், நன்றி நவிலலும்.
அன்னாரின் அந்தியோட்டிக்கிரியை 25-09-2018 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் France Lille இல் உள்ள புனிதத்தீர்த்தகரையில் நடைபெறும். தொடர்ந்து அவரது அஸ்தி புனித தீர்த்தக்கடலில் கரைக்கப்படும்.
வீட்டுக்கிருத்தியக் கிரியைகள் 27-09-2018 வியாழக்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் பிரான்சில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளது அத்தருணம் தாங்கள் குடும்பசகிதம் வருகை தந்து அவரது ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும், அதனைத்தொடர்ந்து 37 Rue Philippe de Comines, 5900 Lille, France எனும் முகவரியில் நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்பாக வேண்டுகிறோம்.
எமது குடும்பத்தலைவியின் மறைவுச்செய்தி கேட்டு வைத்தியசாலையிலும் வீட்டிலும், மலர்ச்சாலையிலும், இறுதிச்சடங்கிலும் நேரடியாக வந்து உதவிகள் செய்தும் அயல் நாடுகளிலிருந்து நேரடியாக வந்து கலந்துகொண்ட உற்றார், உறவினர், நண்பர்கள் அயலவர்கள், மறைவுச் செய்தி கேட்டு தொலைபேசி மூலமாகவும் சமூகவலைத்தளம் மூலமாகவும் எம்முடன் துயர் பகிர்ந்து கொண்ட அன்பு உள்ளங்களிற்கும் பிரான்சில் அன்னாருக்கு மருத்துவ சிகிச்சைகளும் உதவிகளும் அளித்த வைத்தியர்கள் சுகாதார சேவையாளர்களுக்கும் மலர்ச்சாலை சேவையினருக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகள்.
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

