மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தருமலிங்கம் கந்தையா
வயது 6423 மார்ச், 1954 – 3 ஜூலை, 2018
- பிறந்த இடம்
- நெடுந்தீவு
- வாழ்ந்த இடம்
- Gagny
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், அத்தியடியை வதிவிடமாகவும், பிரான்ஸ் Gagny ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தருமலிங்கம் கந்தையா அவர்கள் 03-07-2018 செவ்வாய்க்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா மீனாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற கார்தியேசு, வள்ளியம்மை தம்பதிகளின் அருமை மருமகனும்,
பத்மாவதி(வவா) அவர்களின் அன்புக் கணவரும்,
தயாபரன்(தயா– Chitram Store, பிரான்ஸ்), ரதிதேவி(மாலா– பிரான்ஸ்) ஆகியோரின் அருமைத் தந்தையும்,
சுகனியா, ரமேந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பசுபதி நாகமுத்து தம்பதிகளின் பெறாமகனும்,
கமலா, காலஞ்சென்றவர்களான குணரத்தினம், அமுதலிங்கம் மற்றும் சந்திரன், காலஞ்சென்ற கணகு, உதயகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
துரைராசசிங்கம்(அசோக்- யாழ்ப்பாணம்), சந்திரவதனி, பரமேஸ்வரி, கவுரி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
பரமலிங்கம்(ஜெர்மனி), பராசக்தி, பரஞ்சோதி(நெதர்லாந்து), பாலினி, கனகலிங்கம்(பிரான்ஸ்), கமலேஸ்வரி(பிரித்தானியா) ஆகியோரின் மைத்துனரும்,
காலஞ்சென்ற சண்முகரத்தினம் அவர்களின் சகலனும்,
பகீரதி(பிரான்ஸ்), சோபனாம்பிகா(யாழ்ப்பாணம்), சித்தார்த்தன்(பிரான்ஸ்) ஆகியோரின் பெரிய தந்தையும்,
அஸ்வினி(பிரான்ஸ்), சகானா(பிரான்ஸ்), சரணியா(பிரான்ஸ்), யானு(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-07-2018 வியாழக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 12/11,
புதுவீதி,
அத்தியடி,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

