ஆறுதல்

நன்றி நவிலல்

தர்மலிங்கம் ஸ்ரீதரன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தர்மலிங்கம் ஸ்ரீதரன்

வயது 552 ஆகஸ்ட், 1964 – 14 அக்டோபர், 2019

பிறந்த இடம்
மட்டுவில் வடக்கு
வாழ்ந்த இடம்
Kirchheim Unter Teck

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு, இல்லம் நாடி ஓடோடி வந்து கண்ணீர் சிந்தியவாறு எமக்கு ஒத்தாசைகள் புரிந்தவர்களுக்கும் ஆறுதலும், தேறுதலும் கூறிய அன்புள்ளங்கள் அனைவருக்கும், தொலைபேசி, அனுதாப அட்டைகள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக அனுதாபம் தெரிவித்த உள்நாட்டு, வெளிநாட்டு உறவினர் நண்பர்கள் அனைவருக்கும், கண்ணீர் அஞ்சலி பிரசுரித்த அன்பர்களுக்கும், மலர்வளையம் வைத்து அஞ்சலி செய்தோருக்கும், மற்றும் இறுதிநிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

— குடும்பத்தினர்

வாழ்க்கை வரலாறு

அன்பானவரும், அனைவருக்கும் உதவும் உள்ளம் நிறைந்து உதவி செய்தவருமான தர்மலிங்கம் ஸ்ரீதரன் அவர்களின் வாழ்க்கை வரலாறிது...

இயற்கை அழகு நிறைந்த இலங்கைத் தீவில் தமிழர்கள் தொண்மையாக வாழும் பகுதியும், சைவப் பாரம்பரியம் தழைத்தோங்கிய பொன் பூமியாக புகழ் பெற்ற பன்றித்தலைச்சி அம்மன் அருள் பாலிக்கும் அழகிய தென்மராட்சி மட்டுவில் வடக்கில் தர்மலிங்கம் இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளுக்கு மூத்த மகனாக ஸ்ரீதரன் அவர்கள் 02/AUG/1964 இல் பிறந்தார். ஸ்ரீபாஸ்கரன், ஸ்ரீபரன், ஸ்ரீவிக்கினராஜா, ஸ்ரீமயூரன் அருள் எனும் உடன்பிறப்புகளுடன் ஓடி ஆடி குறும்புகள் செய்து இனிமையாக வளர்ந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

பள்ளிக்கல்வியை முடித்த இவர், கல்லூரியில் பயின்றவுடன் ஜேர்மனியில் குடிபெயர்ந்து வாழத் தொடங்கினார். வாகன உற்பத்தி நிலையத்தில் வேலைசெய்து வந்தவரான இவர், திருமண வயதை எட்டியதும் கிருஸ்ணசாமி முத்துரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளான குலராதா என்பவரை பெற்றோர் நிச்சயித்தபடி திருமணம் முடித்தார். இல்லற வாழ்க்கையை இருவரும் சந்தோஷமாக வாழ்ந்ததன் பயனாக துர்க்கா எனும் அன்புப் பிள்ளையைப் பெற்று பாசமாக வளர்த்து வந்தார்.

விளையாட்டு சம்பந்தமான நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியில் பார்ப்பதில் அலாதி விருப்பம் கொண்டவரான இவர் திருக்கோயில்களுக்கு நன்கொடை அளித்து வந்ததுடன், இயலாதோர் பலருக்கு இயன்றவரை உதவி செய்து வந்தார்.

தனது தாயகமான இலங்கைக்கு மீண்டும் சென்று வாழவேண்டும் என்பதை ஆசையாக கொண்டிருந்தார். கடந்த ஒரு வருடமாக புற்றுநோயால் அவதிப்பட்டுவந்த இவர் தனது பாசத்திற்குரிய அனைவரையும் விடுத்து 14.10.2019 இல் 55 வயதில் ஜேர்மனியில் உள்ள Kirchheim unter teck நகரில் இறையடி எய்தினார்.

அன்னாரின் ஆத்மா எல்லாம் வல்ல இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 17 அக்டோபர், 2019மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.