நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தர்மலிங்கம் யோகராசா
வயது 5615 நவம்பர், 1962 – 4 செப்டம்பர், 2019
- பிறந்த இடம்
- பரந்தன்
- வாழ்ந்த இடம்
- கிளிநொச்சி, கொழும்பு, London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஎமது குடும்ப குலவிளக்கு சிவபதமடைந்த செய்திக் கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் ஆறுதல் கூறியவர்களுக்கும், இறுதிக்கிரியை நடைபெற்றபோது நேரில் கலந்துகொண்ட அனைவருக்கும், தொலைபேசி, மின்னஞ்சல், முகப்புத்தகம் மூலமாகவும் உள்நாட்டிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் தொடர்புகொண்டு ஆறுதல், அனுதாபம் தெரிவித்த அன்பு உள்ளங்களுக்கும், மலர்வளையங்கள், பூமாலைகள் முதலினயவற்றைச் சமர்பித்த அன்பர்களுக்கும், அத்துடன் வானொலிகள், பத்திரிகைகள் ஆகிய நிறுவனங்களுக்கும், பல்வேறு வழிகளில் எம்முடன் சேர்ந்து உதவி ஒத்தாசை புரிந்த உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
சங்கங்கள் கூட்டிவளர்த்து சபையேறி ஆட்சி கண்ட செம்மொழியாம் ஒருங்கே தழைத்தோங்கி வளரும் ஈழவள நாட்டில் சென்னியெனத் திகழும் வடதிசையில் பரந்தன் கிளிநொச்சியில் 15/NOV/1962 இல் திரு.திருமதி தர்மலிங்கம் குஞ்சரம் தம்பதிகளின் அன்பு மகனாக திரு.யோகராசா அவர்கள் இவ் அழகு நிறைந்த ஊரில் மழலையாக அவதரித்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் குறும்புகள் செய்து மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவனானதும் திரு.திருமதி வடிவேலாயுதம் நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளான அனுசூயா எனும் அழகிய தேவதையுடன் திருமண பந்தத்தில் இணைந்து மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து யுமானி, நிரோஜன், ஜனன் எனும் அழகிய பிள்ளைகளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் தீபன் எனவும் நாமம் கொண்ட இவர் கிளிநொச்சி, கொழும்பு போன்றவற்றில் சில காலம் வாழ்ந்ததுடன் எப்போதும் அன்பான பேச்சால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவரும் கடின உழைப்பாளியும். கலகலப்பாக பேசுவதும், தனக்கே உரித்தான புன்சிரிப்பும் கொண்டதுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பெறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார்.
இவ்வாறு மனைவி, பிள்ளைகள், உற்றார், உடன்பிறப்புகள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 04.09.2019 இல் 56 வயதில் கிளிநொச்சியில் இறையடி எய்தினார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிராத்திப்போம்.
சிரிப்பின் சிகரம்
...........சிந்தனை உருவம்
பரிதி வதனம்
...........பார்வை நெடியோன்
விரித்தி அடைய
...........விழித்து உழைத்து
சரித்திரம் படைத்தீர்
...........சந்தன அழகே
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

